வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இரண்டாவது மற்றும் இறுதி விவாதம் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் டொனால்ட் டிரம்பும் ஜோபிடனும் இணைந்து போட்டியிடுகிறார்கள். இவர்கள் கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Debate between Trump and Joe Biden begin at 6.30 am for 90 minutes

இந்த நிலையில் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி நடுநிலையாளர் முன்பு அதிபர் வேட்பாளர்கள் கொள்கைகள், திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நேருக்கு நேராக 3 விவாதங்களை நடத்த வேண்டும். அதன்படி முதல் விவாதம் செப்டம்பர் 30-ஆம் தேதி ஓஹியோவில் கிளீவ்லேண்டில் நடைபெற்றது.

இதனிடையே டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி இரண்டாவது விவாதம் நடைபெற இருந்த நிலையில் அந்த விவாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்றைய தினம் கடைசி விவாதம் நடத்தப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விவாதத்தை பேஸ்புக், ட்விட்டர், யூடியூப்பில் கண்டு களிக்கலாம். சுமார் 90 நிமிடங்கள் இந்த விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் முதலில் டிரம்ப் பேசுவார். டென்னிஸில் உள்ள நாஷ்வில்லே பல்கலைக்கழகத்தில் இந்த விவாதம் நடைபெறுகிறது. இதற்கு நடுவராக கிறிஸ்டன் வெல்கர் பங்கேற்கிறார்.

விசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லைவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

கடந்த முறை நடந்த விவாதத்தில் கொரோனா வைரஸ், அமெரிக்க குடும்பத்தினர், அமெரிக்காவில் இனவாதம், பருவநிலை மாற்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமை உள்பட 6 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன. இந்த முறையும் கடந்த முறையையும் போல விவாதங்கள் அனல் பறக்கும் என தெரிகிறது.

கடந்த முறை விவாதத்தின் போது ஒருவர் பேசும் போது இன்னொருவர் குறுக்கிட்டு பேசியதால் ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு இந்த முறை ஒருவர் பேச தொடங்கியதும் மற்றொருவரின் மைக் ஆஃப் செய்யப்படும் என்ற புதிய விதி அமல்படுத்தப்படுகிறது.

English summary
Debate between Trump and Joe Biden begin at 6.30 am for 90 minutes in Tennessee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X