டெல்டாகிரான்னு புது வேரியண்ட் வந்ததாக சொன்னாங்களே.. ஹையோ ஹையோ.. மேட்டரே வேறயாம்
வாஷிங்டன்: டெல்டாக்ரான் எனும் உருமாறிய கொரோனா பற்றிய தகவல்கள் குறித்து விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டெல்டாக்ரான் உருமாறப்பட்ட கொரோனாவா அல்லது விஞ்ஞான சோதனையின்போது ஏற்பட்ட தவறா என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் என உருமாறி வந்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டினர்.
இது குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியர் லியோண்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ் கூறுகையில், ''கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் என இரண்டு வைரஸ்களின் பாதிப்பும் உள்ளது. இந்த இரண்டு பாதிப்பும் இணைந்து இருப்பதை டெல்டாக்ரான் வைரஸ் என அழைக்கிறோம்.
இந்த நாள்...கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு வேற மாதிரி வரும்...சிம்புவை பங்கம் பொண்ணும் நெட்டிசன்கள்

மரபணு தொகுதி
இதில் ஒமைக்ரானின் மரபணு அடையாளங்களும், டெல்டா வைரஸின் மரபணுத் தொகுதியும் உள்ளது''என தெரிவித்தார். இந்தநிலையில், டெல்டா மற்றும் ஓமிக்ரானின் குணாதிசயங்களை இணைக்கும் புதிய கொரோனா வைரஸாக சொல்லப்படும் டெல்டாக்ரான் குறித்து மாற்றுக் கருத்துகளை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுகள்
கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பார்க்லே ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர் தாமஸ் கூறுகையில், "மீடியாக்களில் டெல்டாக்ரான் படங்கள் வெளியாகின. அதைப் பார்க்கும்போது, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வைரஸ் மாசடைந்திருக்கிறது. தவறுகளால் இது ஏற்படலாம். சில முறை லேப் தவறுகள் இப்படி முடிவைக் கொடுக்கும்'' என தெரிவித்துள்ளார்.

மறுப்பு
ஆனால் டெல்டாக்ரானை கண்டுபிடித்த விஞ்ஞானி காஸ்ட்ரிக்ஸ் இதை மறுத்துள்ளார். ''ஒரு முடிவை வைத்து டெல்டாக்ரான் குறித்து சொல்லவில்லை.பலமுறை இதை உறுதிசெய்திருக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார். ஆனால், வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் லண்டன் வெல்கோம் சாங்கர் ஆயவகத்தின் ஜெப்ரி கூறுகையில், ''டெல்டா மற்றும் ஓமிக்ரான் பரம்பரைகளின் உயிரியல் மறுசீரமைப்பு என்பது நிச்சயமாக இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

தவறுதலா
டெல்டாக்ரான் குறித்து ஆராய்ச்சியாளர்களே இப்படி முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். டெல்டாக்ரான் இருப்பதாகச் சொல்லும் காஸ்ட்ரிக்ஸ் இதை நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார். டெல்டாக்ரான் இருக்கிறதா இல்லையா, அல்லது இது ஆய்வகத்தில் நடந்த தவறா என்று தெரியாமல் அடுத்த அலை வந்துவிட்டதாக உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.