வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பைடன் பதவியேற்பு விழாவில்... வன்முறையை தூண்டாதீர்கள்... டிரம்பிற்கு ஐநா சபை மெசேஜ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வன்முறை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வின்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

டிரம்பின் தூண்டுதலாலேயே அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதையே காரணமாகாக் கூறி டிரம்பின் சமூக வலைத்தள பக்கங்களும் முடக்கப்பட்டன.

Dont Encourage Followers To...: UN Message Ahead Of Biden Inauguration

இந்நிலையில். அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் வன்முறை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் ஐநா கூறியுள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜோ பைடன் பதவியேற்பு நாளிலும், அதற்கு முன்னாலும் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஜனவரி 21ஆம் தேதி வரை அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா: 25-வது சட்ட திருத்தம் மூலம் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய துணை அதிபர் மைக் பென்ஸ் மறுப்பு அமெரிக்கா: 25-வது சட்ட திருத்தம் மூலம் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய துணை அதிபர் மைக் பென்ஸ் மறுப்பு

கடந்த 6ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை நிகழலாம் என்று எஃ.ப்.ஐ. முன்னதாகவே எச்சரிக்கை அளித்திருந்தது. இருப்பினும் அதைத் தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதனாலேயே வன்முறை ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

English summary
The United Nations on Tuesday called on political leaders including US President Donald Trump not to incite violence, as Washington prepares for President-elect Joe Biden's inauguration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X