வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்பாடு: டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் தங்களிடையே சுமூக உறவுகளை மேம்படுத்துவதற்கான வரலாற்ரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை வளைகுடா அரபு நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தியது இல்லை. பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் முயற்சிக்கு வளைகுடா அரபு நாடுகள் எப்போதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தே வந்தன.

Donald Trump announces Israel, UAE reach historic peace agreement

வளைகுடாவில் ஈரான் நாட்டின் கை ஓங்கி வருவது அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடையே மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. இதனால் ஈரானை தனிமைப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நேச நாடுகளிடையே ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட இந்த முயற்சிகளின் விளைவாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மிரேட்ஸ் பட்டத்து இளவரசர் முகம்மதுபின் ஜாயத் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்ததின் மூலம், பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து தம்முடன் இணைத்தும் கொள்ளும் நடவடிக்கையை நிறுத்துவதற்காக இஸ்ரேல் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி திரும்பும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 1948-ல் இஸ்ரேல் சுதந்திரத்துக்குப் பின்னர் அரபு நாடுகளுடன் அது மேற்கொள்ளும் 3-வது ஒப்பந்தம் இது.

1979ல் எகிப்து, 1994-ல் ஜோர்டானுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
US President Donald Trump announced that Israel and the United Arab Emirates had reached a peace deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X