வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐக்கிய அரபு அமீகரத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் கைகோர்த்த பஹ்ரைன்- தூதரக உறவுகளுக்கும் ஒப்பந்தம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து இஸ்ரேலை மற்றொரு அரபு நாடான பஹ்ரைனும் அங்கீகரித்திருக்கிறது. இஸ்ரேல், பஹ்ரைன் இடையேயான தூதரக உறவுகளுக்கான ஒப்பந்தமும் அமெரிக்காவின் முன்முயற்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்துக்கு முழுமையான தனிநாடு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அரபுநாடுகளின் நீண்டகால கொள்கை. இதனால் இஸ்ரேலிடம் இருந்து அரபு தேசங்கள் விலகியே இருந்தன.

முதலில் 1970களின் இறுதியில் எகிப்துடனும் 1990களின் தொடக்கத்தில் ஜோர்டானுடனும் இஸ்ரேல் நட்புறவை உருவாக்கியது. இதன்பின்னரும் அரபு நாடுகள் இஸ்ரேலை ஏற்றுக் கொள்ளாமலேயே இருந்து வந்தன.

தலிபான்களுடன் பேச்சு- ஆப்கானை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு தளமாக்கக் கூடாது: ஜெய்சங்கர் தலிபான்களுடன் பேச்சு- ஆப்கானை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு தளமாக்கக் கூடாது: ஜெய்சங்கர்

 யுஏஒ- இஸ்ரேல்

யுஏஒ- இஸ்ரேல்

இந்த நிலையில் மேற்கு ஆசியாவில் அமைதியை உருவாக்க அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டார். இதன் முதல் கட்டமாக இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம் இடையே அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

 பச்சை துரோகம்- பாலஸ்தீனம்

பச்சை துரோகம்- பாலஸ்தீனம்

இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து அதனுடன் தூதரக உறவுகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த அமைதி ஒப்பந்தம் வழிவகுத்தது. ஆனால் பாலஸ்தீனமோ இதனை பச்சை படுபாதக துரோகச் செயல்; முதுகில் குத்திய துரோகம் என கடுமையாக எதிர்த்தது. இந்த முயற்சிகளுக்காகவே டிரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

 பஹ்ரைன் - இஸ்ரேல்

பஹ்ரைன் - இஸ்ரேல்

இந்த நிலையில் அமெரிக்காவின் தொடர் முயற்சிகளால் மற்றொரு அரபுநாடான பஹ்ரைனும் இப்போது இஸ்ரேலை ஒருநாடாக அங்கீகரித்திருக்கிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல் தினமான செப்.11-ல் இது தொடர்பான ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. பஹ்ரைன்- இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து இந்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இதற்கும் பாலஸ்தீனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 டிரம்ப்- நெதன்யாகு வரவேற்பு

டிரம்ப்- நெதன்யாகு வரவேற்பு

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இது ஒரு வரலாற்று வெற்றி என குறிப்பிட்டிருக்கிறார். இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றிருக்கிறார்.

English summary
US President Donald Trump has announced that a peace deal between Israel and Bahrain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X