வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பதவி நீக்க தீர்மானம்.. 240 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற டொனால்ட் டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியதை அடுத்து 240 ஆண்டு கால வரலாற்றில் டிரம்ப் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அது போல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். பிரசாரத்திற்கு பணம் செலவு செய்ய முடியாததால் போட்டியிடுவதிலிருந்து இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் விலகினார்.

இதனால் ஜோ பிடனுக்கே போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் டிரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்.. டிரம்ப்பின் வாழ்நாளில் கறுப்பு நாள்.. அதிபர் பதவி பறிபோகுமா? இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்.. டிரம்ப்பின் வாழ்நாளில் கறுப்பு நாள்.. அதிபர் பதவி பறிபோகுமா?

என்ன புகார்?

என்ன புகார்?

இந்த நிலையில் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டியதாகவும் ஜோபிடனுக்கு எதிராக சதி செய்ய உக்ரைன் அதிபரிடம் பேரம் பேசியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் டிரம்ப் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டார்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள்

நாடாளுமன்ற பிரதிநிதிகள்

அரசியலமைப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு டிரம்ப் ஆபத்தை விளைவித்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் குறை கூறின. இதையடுத்து டிரம்ப்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்

தீர்மானம்

அமெரிக்காவின் 240 ஆண்டு கால வரலாற்றில் ஏற்கெனவே 2 அதிபர்கள மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1868-ஆம் ஆண்டு தனது அரசியல் எதிரிகளைக் கொல்ல தூண்டியதாக அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பிரதிநிதிகள்

பிரதிநிதிகள்

இவர் செனட் சபையில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அது போல் 1998-ஆம் ஆண்டு அதிபர் பில் கிளிண்டர் மீதும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இவர் வெள்ளை மாளிகை பெண் ஊழியருடன் தவறான உறவு கொண்டிருந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளில் தோற்கடிக்கப்பட்டது.

செனட் உறுப்பினர்கள்

செனட் உறுப்பினர்கள்

இதனால் பதவி நீக்க தீர்மானத்தை சந்தித்த அமெரிக்க அதிபர்களில் 3-ஆவது அதிபர் டிரம்ப் ஆவார். இவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு டிரம்ப் மீதான தகுதிநீக்க தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் 66 செனட் உறுப்பினர்கள் தேவை. இதனால் இந்த தீர்மானம் இங்கு தோற்கடிக்கப்படலாம் என தெரிகிறது.

English summary
Donald Trump has registered his name in the 240 years of US History. He is the 3rd President who faces impeachment vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X