வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்பின் புதிய சாதனை.. பதவியை முடிக்கும் காலத்தில்...அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வரலாற்றில் மிக மோசமான மதிப்பீட்டு புள்ளியுடன் பதவியை முடிக்கும் அதிபர் என்ற மோசமான சாதனையை டிரம்ப் படைத்துள்ளார்.

கின்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிபர் டிரம்புக்கு ஒப்புதல் மதிப்பீடு புள்ளி 33% ஆகவும், அவரது மறுப்பு மதிப்பீடு புள்ளி 60% ஆகவும் உள்ளது.

donald Trump finishes with worst first term approval rating ever

அமெரிக்க அதிபர் ஒருவர் அவரது பதவி காலத்தை முடிக்கும்போது, அவரது செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டு மதிப்பெண் கொடுக்கப்படும். அதன்பேரில் அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் என்ற சாதனையை பதவி காலம் முடிக்க உள்ள டிரம்ப் பெற்றுள்ளார்.கின்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிபர் டிரம்ப் ஒப்புதல் மதிப்பீடு புள்ளி 33% ஆகவும், அவரது மறுப்பு மதிப்பீடு புள்ளி 60% ஆகவும் உள்ளது.

அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே மிக குறைந்த மதிப்பீடு புள்ளியை டிரம்ப் பெற்றுள்ளார்.தேர்தலுக்கு முன்பு டிரம்ப் 44% ஒப்புதல் மதிப்பீட்டையும், 53% மறுப்பு மதிப்பீட்டைக் கொண்டிருந்தார். தேர்தலுக்கு பிறகு அவரின் மிக மோசமான நடத்தைகளால் மதிப்பீட்டு புள்ளி சுமார் 5% குறைந்துளளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையும் டிரம்பை மிக மோசமான மதிப்பீட்டுக்கு கொண்டு சென்றததற்கான முக்கிய காரணம் ஆகும்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சுமார் 56% ஒப்புதல் மதிப்பீட்டையும், 40% மறுப்பு மதிப்பீட்டையும் பெற்றார் .டிரம்பிற்கு முன்பு, ஒரு அதிபர் பதவிக்காலத்தின் முடிவில் முந்தைய மிகக் குறைந்த ஒப்புதல் மதிப்பீடு முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டருக்கு சொந்தமானது. டிரம்பைத் தவிர்த்து தனது முதல் பதவியை 50% க்கும் குறைவான ஒப்புதல் மதிப்பீட்டில் முடித்த ஒரே அதிபராக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Trump has the worst record of ending a term with the worst rating in US presidential history
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X