வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயத்துறைக்கு 19 பில்லியன் டாலர்.. வாரி வழங்கிய ட்ரம்ப்.. இந்தியாவில் 2வது நிதி பேக்கேஜ் எப்போது?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விவசாயத்துறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 19 பில்லியன் டாலர் நிதி பேக்கேஜை அறிவித்துள்ளார்.

"உலகளாவிய தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் அமெரிக்க பெரிய விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் 19 பில்லியன் டாலர் நிவாரண திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்" என்று டிரம்ப், ஒரு, செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

Donald Trump gvt announces $19 billion relief for farmers amid coronavirus

விவசாயத் துறை செயலாளர் சோனி பெர்ட்யூ கூறுகையில், பள்ளிகளும் உணவகங்களும் மூடப்பட்டு அதிகமான அமெரிக்கர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். வீட்டிலேதான் மக்கள் சமைத்து சாப்பிடுவதால், விவசாய சந்தையில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது உணவு விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது. பல இடங்களில் விவசாயிகள் பால் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். அல்லது வீணாக சாலையில் ஊற்றியுள்ளனர். பயிர்களும் வீணாகியுள்ளன.

சந்தைக்குத் தயாரான காய்கறிகள் மீது கலப்பையால் உழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது., விவசாயிகளுக்கு நிதி ரீதியாக கஷ்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை உற்பத்தி செய்பவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாகும்.

எனவேதான், இதுபோன்ற பேக்கேஜ் அவசியப்படுகிறது. சுமார் 3 பில்லியன் டாலர் பணம் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களையும், பால் வாங்குவதற்கும், அதை சமூக உணவு வங்கிகளுக்கு மறுபகிர்வு செய்வதாகவும் பயன்படுத்தப்படும் என்று, பெர்ட்யூ கூறினார். அமெரிக்காவில், வேலை இழப்பு அதிகரித்துள்ள நிலையில், உணவு மற்றும் மளிகைப் பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கி, மக்கள் செல்ல ஆரம்பித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்க பண்ணை மற்றும் உணவுத் தொழில் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுனால் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டினர்.. விசா காலத்தை மே 3 வரை நீட்டித்த உள்துறைலாக்டவுனால் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டினர்.. விசா காலத்தை மே 3 வரை நீட்டித்த உள்துறை

விவசாய பொருள் உற்பத்தி மற்றும் அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாய உற்பத்தி பொருட்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

"பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், இப்போதைக்கு, பால், இறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுகளை வாங்குவதில்லை, இதனால் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை விலையில் சரிவு ஏற்படுகிறது" என்று அமெரிக்க பண்ணை நிர்வாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. விசாரணையை தொடங்கும் அமெரிக்கா

    ஏற்கனவே 2 டிரில்லியன் மதிப்புக்கான நிதி பேக்கேஜை ட்ரம்ப் அரசு அறிவித்திருந்தது. இப்போது விவசாயிகளுக்காக தனியாக 19 பில்லியன் டாலர் நிதி பேக்கேஜை அறிவித்துள்ளது. அதேநேரம், மத்திய அரசு, ரூ.1.7 லட்சம் கோடிக்கு பேக்கேஜ் அறிவித்தது. இது மார்ச் 27ம் தேதி. இதன்பிறகு, இதுவரை வேறு பேக்கேஜ்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    President Donald Trump on Friday announced a $19 billion financial rescue package to help the agriculture industry weather the staggering economic downturn sparked by measures to defeat the coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X