வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க வரலாற்றில் 2வது முறையாக நாடாளுமன்றத்தின் கண்டனத்துக்குள்ளான ஒரே அதிபர் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் கண்டனத்துக்குள்ளாகி (இம்பீச்மென்ட்) இருப்பவர் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டும்தான்.

Recommended Video

    ட்ரம்புக்கு எதிராக.... 2-வது முறையாக பதவி நீக்க தீர்மானம்: 232 பேர் வாக்களிப்பு!

    அமெரிக்க தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைச் சம்பவத்தில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

    Donald Trump is the first US president to face impeachment for the second time

    டொனால்ட் டிரம்ப், வரும், 20ம் தேதி பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசியதால், அதிபர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியது. இவ்வாறு பதவி நீக்கம் செய்தால் பிறகு அவர் பொது பதவியில் அமர முடியாது என்பதால் வருங்காலத்திற்காகவும் யோசித்து ஜனநாயக கட்சி இவ்வாறு ஒரு மூவ் எடுத்தது.

    மேலும், அரசியல் சாசனத்தின், 25வது பிரிவைப் பயன்படுத்தி, டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியது. இந்த கோரிக்கை துணை அதிபர் மைக் பென்சால் ஏற்கப்படவில்லை.

    வரலாற்று நிகழ்வு.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேறியது வரலாற்று நிகழ்வு.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேறியது

    எனவே, நாடாளுமன்றத்தில், டிரம்ப்-க்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. பின்னர் வாகெடுப்புக்கு விடப்பட்டு இந்த இம்பீச்மென்ட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிரம்ப்பின் பதவியை இனி செனட் சபைதான் தீர்மானிக்கும்.

    English summary
    For the first time in US history, an impeachment has been brought against a president for the second time, is Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X