வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலிபோர்னியா காட்டுத் தீ- டிரம்ப் சொன்ன விளக்கம் இருக்கே.. நடிகர் செந்திலையே தூக்கி சாப்பிடுறாரே!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மரங்கள் வெடிப்பதால் தீ விபத்து ஏற்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த அஸ்திரத்தை வீசியுள்ளார். இன்று கொரோனா வைரஸ் தானாக செயலிழந்தது விடும் என்று கூறி இருந்த நிலையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா, ஓரேகான் ஆகிய இடங்களில் இருக்கும் வனப்பகுதிகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எறிந்து வருகிறது. இதற்கு இதுவரை 35 பேர் உயிரிழந்து உள்ளனர். 30,000 தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்க கடந்த திங்கள் கிழமையில் இருந்து போராடி வருகின்றனர்.

Donald Trumps new theory that US Wildfires Started Because of trees Explode

இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்து இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ''மரங்களை மோசமாக நிர்வாகம் செய்வதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப் பகுதியை பாதுகாக்க வலுவான நிர்வாகம் தேவை.

மரங்கள் குறுகிய காலத்தில் அதாவது 18 மாதங்களில் கீழே விழுந்து விடுகின்றன. இதையடுத்து அவை வறண்டு போகின்றன. தீக்குச்சிகள் போல் ஆகிவிடுகின்றன. இதனால், மரங்கள் வெடித்து தீ விபத்து ஏற்படுகிறது. கடுமையான வெப்பம் தீ விபத்தை குறிக்கிறது. குளிர்காலம் வந்துவிட்டால், நீங்களே கவனியுங்கள், தீ முற்றிலும் அணைந்து விடும். இந்த அறிவியல் உங்களுடன் உடன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். மனிதர்களின் செயலால் உலகமே வெப்பமாகி வருகிறது என்பதை அறிவியல் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்'' என்றார்.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கலிபோர்னியா மற்றும் ஓரேகானில் இருக்கும் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அணைப்பதற்கு தீயணைப்பு வீர்கள் போராடி வருகின்றனர். லாஸ் ஏஞ்ச்சலஸ் அருகில் அர்காடியாவில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கடந்த ஞாயிற்றுக் கிழமை அரசு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!! ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!!

கலிபோர்னியாவில் பல பூங்காக்கள் தீயில் கருகியுள்ளன. கலிபோர்னியா மற்றும் ஓரேகானில் பயங்கர வெப்பம் நிலவுவதால் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெத் வேலி பகுதியில் வெப்பம் 54 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான வெப்ப நிலை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Donald Trump Thinks the US Wildfires Started Because Trees 'Just Explode'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X