வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? விளக்கிய டிரம்ப்!

    வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப் நாய் காயம் அடைந்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    2012-ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை அமெரிக்க படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் சிரியாவில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    Donald Trump says that a talented dog injured in American raid in Syria

    இதுகுறித்து அவர் நேற்று அளித்த விளக்கத்தில் கூறுகையில், பக்தாதியை அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக தேடி வந்தது. வட மேற்கு சிரியாவில் இரவு நேரத்தில் மிக தைரியமாக ரய்டு நடத்தப்பட்டு அல்பக்தாதி இருக்கும் இடத்தை அமெரிக்க படையினர் அடைந்தனர்.

    மொத்தம் 8 ஹெலிகாப்டர்களுடன் படைகள் சென்றன. அப்போது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பக்தாதியின் பாதுகாவலர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் பலர் மரணம் அடைந்தனர்.இதையடுத்து அங்கிருந்த குகை ஒன்றுக்கு பக்தாதி தனது 3 குழந்தைகளை எடுத்துக் கொண்டு ஓடினார். அப்போது அவரை மோப்ப நாய்கள் துரத்தின.

    அமெரிக்க படையினரும் துரத்தினர். இதில் பக்தாதி தன்னுடைய உடலில் கட்சியிருந்த குண்டை வெடிக்க செய்து, உடல் சிதறி பலியானார். இதில் அவரது 3 குழந்தைகளும் பலியாகின. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பக்தாதியை துரத்தி சென்ற மோப்ப நாய் காயமடைந்தது.

    அந்த கட்டடம் நல்ல திடமாக இருந்தது. யாரும் காயம் அடையாதது இன்னும் நம்ப முடியவில்லை. எனவே அந்த நாய் மிகவும் சிறந்ததாகும். உண்மையில் சொல்ல போனால் பக்தாதி சென்ற குகைக்குள் நாங்கள் பாதுகாரப்பு கருதி ரோபோக்களை அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் அவற்றை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றார் டிரம்ப்.

    English summary
    American President Donald Trump says that US service dog was injured in American air raid to chase ISIS leader Abu Bakr Al Baghdadi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X