வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெஸ்டிங் அதிகரிச்சா.. கேஸ்களும் அதிகரிக்கும்.. அதான் டெஸ்டிங்கை குறைக்க சொல்லிட்டேன்.. டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே அவர் கூறினாரா இல்லை பிரசாரத்தை கலகலப்பூட்டுவதற்காக அவர் அவ்வாறு கூறினாரா என தெரியவில்லை.

Recommended Video

    Trump மீண்டும் சர்ச்சை பேச்சு...விளக்கம் கொடுத்த White House

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் ஒக்லஹோமா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து இந்த பிரசார கூட்டம் நடைபெற்றது.

    மிக மோசமாக செல்லும் பிரேசில்.. பாதிப்பில் சரிபாதியான பலி எண்ணிக்கை.. செய்வதறியாது திகைக்கும் அரசு மிக மோசமாக செல்லும் பிரேசில்.. பாதிப்பில் சரிபாதியான பலி எண்ணிக்கை.. செய்வதறியாது திகைக்கும் அரசு

    கூர்மை

    கூர்மை

    இதில் அவர் பேசுகையில் கொரோனா பரிசோதனை என்பது இரு பக்கங்களிலும் கூர்மையான வாள் போன்றதாகும். இதில் கொடுமையாக பகுதி என்னவென்றால் நீங்கள் பரிசோதனைகளை அதிகரிக்கும் போது வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    விளையாட்டுக்கு

    விளையாட்டுக்கு

    எனவே கொரோனா பரிசோதனை செய்யும் அளவை குறைக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். இந்த விஷயத்தை அவர் பிரசாரதச்தில் விளையாட்டுக்காக கூறினாரா அல்லது சீரியஸாக கூறினாரா என தெரியவில்லை. எனினும் இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    25 லட்சம் பேர்

    25 லட்சம் பேர்

    அவர் கூறுகையில் டிரம்ப் அந்த கருத்தை விளையாட்டாகத்தான் கூறினார். ஆனால் அதை ஊடகங்கள்தான் பெரிதுப்படுத்திவிட்டன. மற்றபடி இந்த உலகிலேயே டெஸ்டிங்கில் நாங்கள் தான் முன்னணியில் உள்ளோம். இதுவரை 25 லட்சத்திற்கு மேலானோருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டதை எண்ணி பெருமை அடைகிறோம் என்றார்.

    உச்சம் பெற்ற மாகாணங்கள்

    உச்சம் பெற்ற மாகாணங்கள்

    கொரோனாவின் மோசமான பாதிப்பில் அமெரிக்கா சிக்கி முதலிடத்தில் உள்ளது. பாதிப்பிலும் இறப்பு எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ள இந்த நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா உச்சத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் செய்தால் கொரோனா மேலும் பரவும் என்பதால் பிரசாரத்தை ஒத்தி வைக்குமாறு உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

    6 பேருக்கு கொரோனா

    6 பேருக்கு கொரோனா

    துல்சாவில் நேற்றைய தினம் முதல் தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கினார். டிரம்ப் மேடையில் ஏறி பேசுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் துல்சா தேர்தல் பிரசார குழுவின் 6 உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    American President Donald Trump says he urged health officials to slow down the Covid 19 testing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X