வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி.. எல்லாவற்றையும் அவர் பார்த்துப்பார்.. டிரம்ப்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிரம்ப்யுடன் பிரதமர் மோடி நியூயார்க்கில் முக்கிய ஆலோசனை-வீடியோ

    வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தந்தை என்றும் அவர் தீவிரவாதத்தையும் காஷ்மீர் விவகாரத்தையும் பார்த்துக் கொள்வார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நேற்று இரவு பேசினார். ஹூஸ்டன் நிகழ்ச்சி தொடங்கியது முதல் டிரம்ப்பை மோடி 3 முறை சந்தித்துள்ளார்.

    இந்த நிலையில் ஐநா தலைமையகத்தில் நடந்த சந்திப்பில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அத்துறையின் செயலாளர் விஜய் கோகலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் தந்தை

    இந்தியாவின் தந்தை

    இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக மோடியும் டிரம்பும் சுமார் 45 நிமிடங்கள் பேசிவிட்டு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது டொனால்ட் டிரம்ப் பேசுகையில் இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்றதுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள கருத்து வேறுபாடுகளையும் மோதல்களையும் மோடி ஒருங்கிணைத்துள்ளார். எனவே அவர் இந்தியாவின் தந்தையை போன்றவர். ஒரு தந்தை ஒரு குடும்பத்தை எப்படி ஒருங்கிணைப்பாரோ அது போல் தேசத்தை ஒருங்கிணைத்துள்ளார்.

    அமெரிக்கா பாப் ஸ்டார்

    அமெரிக்கா பாப் ஸ்டார்

    இனி எவ்வித மோதல்களையும் இந்தியா சந்திக்காது. அமெரிக்காவின் பாப் ஸ்டார் எல்விஸ் பிரெஸ்லியை போன்றவர் மோடி. அவர் காஷ்மீர் விவகாரத்தையும் பயங்கரவாதத்தையும் பார்த்துக் கொள்வார் என்றார். அப்போது பாகிஸ்தான் ராணுவமும் அந்நாட்டு உளவுத் துறையும் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பயிற்சி அளித்ததை பிரதமர் இம்ரான் கானே ஒப்புக் கொண்டுள்ளாரே அதை எப்படி பார்க்கிறீர்கள் என டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    பிரச்சினை

    பிரச்சினை

    அப்போது டிரம்ப் கூறுகையில், இம்ரான் கான் கூறிய மெசேஜ் எனக்கானது அல்ல. அது பிரதமர் மோடிக்கானது. அதை அவர் உரக்கவும் தெளிவாகவும் எடுத்துக் கூறிவிட்டார். இந்த பிரச்சினையை அவர் நிச்சயம் கையாள்வார் என நிச்சயமாக நம்புகிறேன் என்றார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    காஷ்மீர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு டிரம்ப் கூறுகையில் உங்கள் நாட்டு பிரதமர் அதை பார்த்துக் கொள்வார். உங்களுக்கு சிறப்பான பிரதமர் கிடைத்துள்ளார். எனக்கு சந்தேகமே இல்லை. அவர் பார்த்துக் கொள்வார். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு ஜென்டில்மேன்களும் (மோடி, இம்ரான்) சேர்ந்து எதையாவது செய்ய வேண்டும் என்றார்.

    English summary
    American President Donald Trump says that Narendra Modi is father of India. He will take care of terror and Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X