வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சும்மா இதையே பேச கூடாது.. இதை எப்போதோ செய்துட்டோம்.. செவ்வாய் கிரகத்துக்கு டிரம்ப் புது விளக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலவு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விளக்கத்தை அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தால் மட்டுமே 2024-இல் நம்மால் நிலவில் கால் வைக்க முடியும் என நாசா அட்மின் ஜிம் பிரிடன்ஸ்டைன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதாவது நாம் செலவு செய்யும் பணத்துக்கு நாசா இன்னமும் நிலாவுக்குச் செல்லப் போவதாக பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

75 அடி நீள ரயில்வே பாலத்தை இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாகத் திருடிச் சென்ற பலே திருடர்கள்..!75 அடி நீள ரயில்வே பாலத்தை இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாகத் திருடிச் சென்ற பலே திருடர்கள்..!

பதிவில் டிரம்ப் கருத்து

நாம் இதை 50 ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவிட்டோம். பாதுகாப்பு, அறிவியல் மற்றும் செவ்வாய் கிரகம் (நிலவின் ஒரு பகுதி) ஆகியவற்றில் நாசா கவனம் செலுத்த வேண்டும் என தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மரண கலாய்

இதற்கு நெட்டிசன்கள் அவரை கலாய்த்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர் செவ்வாய் கிரகம், நிலவு ஆகிய படங்களை காண்பித்து சிவப்பாக இருப்பதுதான் செவ்வாய் கிரகம், வெள்ளையாக இருப்பதுதான் நிலவு. இத்தனை சிறிய நிலவின் ஒரு பகுதியாக இத்தனை பெரிய செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில் புத்திசாலி

நீங்கள் உண்மையில் ஒரு புத்திசாலி.

அங்கேயே விட்டு விட வேண்டும்

விரைவில் டொனால்ட் டிரம்ப்பை நிலவுக்கு நாசா அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட வேண்டும்.

English summary
Donald trump says that Moon is part of Mars. Netisans teach lesson to Trump about planets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X