வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump replies to oppostion party | என்னை நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்: டிரம்ப் ஆவேசம்

    வாஷிங்டன்: என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ரிப்பளிக்கன் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடென் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Donald Trump says that opposition party who is trying to out from my post is historical scandal

    ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைனில் பணியாற்றிய அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என அந்த நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் டிரம்பை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி தொடங்கியுள்ளது. இந்த விசாரணை வேடிக்கையானது என டிரம்ப் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இதுகுறித்து டிரம்ப் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது நடந்து வருவது அமெரிக்காவின் அரசியல் வரலாற்றின் மிகப் பெரிய ஊழலாகும். ஜனநாயக கட்சியினர் உங்கள் சுகாதாரத்தையும் உங்கள் வாக்குகளையும் சுதந்திரத்தையும் பறிக்க நினைக்கிறார்கள்.

    நான் மக்களின் நலனுக்காக போராடுகிறேன். இதனால் அந்த கட்சியினர் என்னை தடுக்க விரும்புகிறார்கள் என்றார். தன்னை பதவியை நீக்க கோருவது ஜனநாயக கட்சியினரின் முயற்சி அமெரிக்க அரசியல் வரலாற்றின் மிகப் பெரிய ஊழலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    American President Donald Trump says that opposition party who is trying to out from my post is historical scandal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X