வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா- சீனா இடையேயான மோதல் மிகவும் மோசமானது.. அமெரிக்கா உதவத் தயார்.. வலிய வம்பிழுக்கும் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியா சீனா இடையேயான மோதல் மிகவும் மோசமானது என்றும் அந்த நாடுகள் விரும்பினால் இந்த பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    India-China பிரச்சினையில் America தலையிட்ட உதவ தயார்-Trump | Oneindia Tamil

    ஏற்கெனவே ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்த போதும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தன்னை அழைத்ததாக கூறி பின்னர் அது போல் உள்நாட்டு பிரச்சினையில் மூன்றாவதாக எந்த நாட்டையும் தலையிட அழைக்கவில்லை என இந்தியா விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய எல்லைக் கோட்டு பகுதியில் கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஊடுருவலை இந்தியா 3 முறை முறியடித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங்குடன் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புது சர்ச்சை.. வெள்ளை இன சிறுவனின் இனவெறி.. 2 உசுரு போச்சு.. அவனுக்கு வக்காலத்து வாங்கும் டிரம்ப்புது சர்ச்சை.. வெள்ளை இன சிறுவனின் இனவெறி.. 2 உசுரு போச்சு.. அவனுக்கு வக்காலத்து வாங்கும் டிரம்ப்

    இந்தியா சீனா எல்லை

    இந்தியா சீனா எல்லை

    சுமார் இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா, சீனா இடையே எல்லையில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

    பதற்றத்தை தணிக்க

    பதற்றத்தை தணிக்க

    இது மிகவும் மோசமான சூழலாகியுள்ளது. இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை தணிக்க நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். எங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால் முழு அன்புடன் அதில் ஈடுபட்டு அவர்களுக்கு உதவ தயாராகவே உள்ளோம். இரு நாடுகளிடமும் இதுகுறித்து பேசி வருகிறோம். இந்தியாவுக்கு சீனா குடைச்சல் கொடுத்து வருவதாக கருதவில்லை.

    வாக்களிப்பார்கள்

    வாக்களிப்பார்கள்

    மக்கள் புரிந்து கொள்வதை விட அவர்கள் இருவருமே மிகவும் வலுவாக உள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி எனது நண்பர். அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். எதுவும் சுலபமல்ல. இந்தியாவிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் நமக்கு (டிரம்ப் கட்சி) நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நிச்சயம் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.

    இந்தியாவுக்கு சென்ற டிரம்ப்

    இந்தியாவுக்கு சென்ற டிரம்ப்

    கொரோனா பரவலுக்கு முன்னர் நான் இந்தியாவுக்கு சென்றிருந்தேன். இந்தியர்களுக்கு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார். நரேந்திர மோடி சிறந்த நபர் என்றார். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வீ ஃபெங்கும் மாஸ்கோவில் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    188 நாடுகள்

    188 நாடுகள்

    அதற்கு டிரம்ப் கூறுகையில் இந்த காலகட்டத்தில் ரஷ்யாவை விட சீனாவை குறித்துதான் அதிகம் பேச வேண்டி இருக்கிறது. ஏனெனில் சீனா செய்து வரும் விஷயங்கள் மிகவும் மோசமானது. சீனாவின் வைரஸால் என்ன ஆனது என பார்த்தீர்கள் அல்லவா. உலகில் 188 நாடுகளில் என்ன நிலை என்பது உங்களுக்கு தெரியுமே என்றார் டிரம்ப்.

    English summary
    American President Donald Trump says that Standoff between India and China are very nasty. We are ready to solve the issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X