வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன்னிப்பு.. அதுவும் "சுய மன்னிப்பு".. இப்போதைக்கு டிரம்ப்புக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை இதுதானாம்!

டிரம்ப் தனக்குதானே மன்னிப்பு வழங்க திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பட்ட காலிலேயே படும் என்பார்கள்.. அதேபோலதான் டிரம்ப்பும்.. அடுத்தடுத்து அவருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார். மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டு விட்டார். ஆனாலும் அவர் திருந்தியபாடில்லை. தனக்குத் தானே மன்னிப்பு வழங்கிக் கொள்ள அவர் திட்டமிட்டு வருகிறாராம்.

இதுகுறித்து தனது ஆதரவாளர்களிடம் அவர் விவாதித்துள்ளாராம். ஆனால் அவர் செய்த செயல்களுக்கெல்லாம் இது மட்டும் போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாமானிய காரியமா அவர் செய்துள்ளார். மொத்த அமெரிக்காவின் பெயரையும் கெடுத்து விட்டார். கிட்டத்தட்ட தேச விரோத காரியத்தில் அவர் ஈடுபட்டு விட்டார். அதுதான் உண்மை.

கேபிடல் பகுதியில் நடந்த கலவரம் அமெரிக்க வரலாற்றில் கடந்த பல ஆண்டுகளாக கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத செயலாகும்.. அப்படி ஒரு கலவரத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.. உயிரிழப்புகளும் நடந்து விட்டன. ஒட்டுமொத்த அமெரிக்காவும் அதிர்ந்து போய் நிற்கிறது. இதற்கெல்லாம் காரணம் டிரம்ப்பின் தூண்டி விட்ட பேச்சுக்களும், விஷம பேச்சுக்களும்தான்.

உதவியாளரின் ட்விட்டர் அக்கவுண்ட்டை கடன் வாங்கி ட்வீட் போட்ட டிரம்ப்.. ரொம்ப கேவலம் உதவியாளரின் ட்விட்டர் அக்கவுண்ட்டை கடன் வாங்கி ட்வீட் போட்ட டிரம்ப்.. ரொம்ப கேவலம்

கலவரம்

கலவரம்

இந்த நிலையில் கேபிடல் கலவரத்திற்குப் பிறகு தனது உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் டிரம்ப்... அப்போது அவரது தலைமை உதவியாளர் பாட் சிபோலன் சொல்லும்போது, கேபிடல் கட்டடத்திற்குள் உங்களது ஆதரவாளர்களை நுழைய செய்த செயலுக்காக உங்கள் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

 சுயமன்னிப்பு

சுயமன்னிப்பு

அதைக் கேட்ட டிரம்ப், தனக்கு சுய மன்னிப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர்களிடம் சொன்னாராம்.. இதைக் கேட்டு உதவியாளர்கள் செம ஷாக் அடைந்துள்ளனர். ஒருவேளை இதுபோல சுய மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடம் உண்டா, அப்படி வழங்கினால் அது சட்டப்படி செல்லுமா என்று தெரியவில்லை... அப்படியே வழங்கப்பட்டாலும் எப்போது அது அறிவிக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ட்வீட்

ட்வீட்

இதுபோல சுய மன்னிப்பு வழங்க தனக்கு அதிகாரம் உள்ளதாக அவர் தொடர்ந்து சொல்லி வந்துள்ளார். 2018ம் ஆண்டு கூட இதுதொடர்பாக அவர் ட்வீட் ஒன்றையும் போட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்... இப்போது அவரது சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன.

 கோமாளி

கோமாளி

ஆனால் அதிபராக இருப்பவர் தனக்குத் தானே மன்னிப்பு அளிக்க முடியாது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்களாம். இதனால் டிரம்ப்பால் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கிளம்பி போற வரைக்கும் சும்மாவே இருக்க மாட்டார் போல இந்த டிரம்ப். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அமெரிக்க மக்களால் டிரம்ப்பை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட பெரிய கோமாளியாக அவர் வலம் வந்து விட்டார்!

English summary
Donald Trump self pardon law leaving
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X