வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறவெறி முழக்க வீடியோவை ரீட்விட் செய்துவிட்டு டெலிட் செய்த டொனால்ட் டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வெள்ளை நிறத்தவர்களே ஆட்சிக்கு வர வேண்டும் என தனது ஆதரவாளர் கோஷமிட்ட வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுவிட்டு பின்னர் அதை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கிவிட்டார். கருப்பினத்தவர்களுக்கு எதிரான படுகொலை உள்ளிட்டவற்றில் அமெரிக்கர்களின் கோபத்திற்குள்ளான டிரம்ப் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

Recommended Video

    Trump-ன் சர்ச்சை Tweet மீண்டும் வெடித்தது நிறவெறி சர்ச்சை | Black Lives Matter

    வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், டெமோகிரேட்டிக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்..

    Donald Trump tweets video with White power chant and deletes it

    இந்த தேர்தலில் டிரம்ப் எப்படியாயினும் வெற்றி பெற வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறார். எனினும் விசா விவகாரம், நிறவெறி விவகாரம், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிரச்சினைகளில் டிரம்ப் மீது அமெரிக்கர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்த நிலையில் அண்மையில் கருப்பினத்தவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதை கண்டித்து அமெரிக்கர்கள் பாரபட்சம் ஏதுமின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அண்மையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் டிரம்ப். இந்த நிலையில் டிரம்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆங்காங்கே பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புளோரிடாவில் டிரம்பிற்கு ஆதரவாக ஒருவர் பிரச்சாரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் ரீட்வீட் செய்துவிட்டு அதை நீக்கிவிட்டார்.

    ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல்

    அந்தளவுக்கு அந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி என்னதான் அந்த வீடியோவில் இருக்கிறது என பார்த்தால் நிறவெறியை தூண்டும் வகையிலான கருத்து. அந்த வீடியோ புளோரிடாவில் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது. ஒரு சிறிய கோல்ப் கார்டு வாகனத்தில் (ரோப் கார் போன்றுள்ளது) ஒருவர் டிரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

    அவர் டிரம்பை ஆதரித்து விளம்பர தட்டிகளை வைத்திருந்தார். அப்போது ஒயிட் பவர்- அதாவது வெள்ளை நிறத்தவர்களே ஆட்சிக்கு வர வேண்டும் என முழக்கமிடுகிறார். முழுக்க முழுக்க நிறவெறியை தூண்டும் வகையில் இந்த முழக்கம் இருக்கிறது. ஏற்கெனவே கருப்பினத்தவர்கள் விவகாரத்தில் பலத்த எதிர்ப்புகளை சந்தித்த டிரம்ப், அந்த வீடியோவை அவசரமாக நீக்கினார்.

    அந்த வீடியோவில் டிரம்பிற்கு எதிராகவும் கருத்துகள் இருக்கின்றன. அதில் டிரம்பை நாசி என்றும் நிற வெறியாளர் என்றும் முழக்கமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில் தி வில்லேஜஸ் என்றால் டிரம்பிற்கு மிகவும் பிடிக்கும். அது போன்ற நிறவெறி கருத்தை அவர் அந்த வீடியோவில் கேட்கவில்லை. அவரது ஆதரவாளர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மட்டுமே அவர் வீடியோவில் கண்டார் என்றனர். நிறவெறி கருத்தை வெளியிட்ட ஆதரவாளரை டிரம்ப் கண்டித்தாரா என கேள்வி எழுப்பிய போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

    அந்த வீடியோவை ரீட்வீட் செய்திருந்த டிரம்ப், தி வில்லேஜஸின் மக்களுக்கு நன்றிகள். டெமோகிரேட்டிக் கட்சியினர் தோற்பது உறுதி. ஊழல்வாதி ஜோபிடன் தோற்பது நிச்சயம். உங்களை விரைவில் சந்திப்பேன் என பதிவிட்டிருந்தார் டிரம்ப்.

    English summary
    American President Donald Trump tweets video of a man chants white power and then he deletes that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X