வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வார்ரே வா.. விஜயா செய்த வேலையை பார்த்தீங்களே.. மொத்தமாக டிரம்ப் "கணக்கை" முடிச்சது இவர்தானாம்!

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது.. இப்படி ஒரு காரியத்துக்கு பின்னால் இருந்தது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான விஜயா காட்டே என்ற பெண்தான்..!

ட்ரம்புக்கு சோஷியல் மீடியாவே இல்லையென்றால் தலையை பிய்த்து கொள்வார் போலும்.. அவரது பல கருத்துக்களை இப்படித்தான், குறிப்பாக ட்விட்டரில்தான் வெளியிட்டு வந்தார்.

Donald Trump twitter ban by Indian American Woman Vijaya Gadde

சில தினங்களுக்கு முன்பு, மாளிகையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் சமூக ஊடகத்தில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட காரணங்களுக்காக ட்விட்டர் நிறுவனம், டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கியது... இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் விஜயா கட்டே என்பவர்தான்.

ட்விட்டர் நிறுவனத்தின் சட்டம் மற்றும் கொள்கைவகுக்கும் பிரிவின் தலைவராக உள்ள விஜயா காட்டே இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "வன்முறை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக ட்ரம்ப்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது" என்று காரணம் தெரிவித்துள்ளார்.

யார் இந்த விஜயா?

இந்தியாவில் பிறந்தவர்.. சின்ன வயசிலேயே அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.. இவரது அப்பா ஒரு கெமிக்கல் என்ஜினியர்.. கல்ஃப் ஆப் மெக்ஸிகோ நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.. அதனால்தான், விஜயா தன்னுடைய படிப்பை நியூ ஜெர்ஸியில்தான் முடித்தார். நியூயார்க் கார்னெல் பல்கலைக்கழக சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்...

பிறகு ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றினார்.. இறுதியில், 2011-ல் ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் ஒரு வக்கீலும்கூட. 45 வயதாகிறது.. சிறப்பான கொள்கையை வகுத்து ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 10 வருஷத்துக்கும் மேலாக சிறப்பாக செயல்பட வழிவகுத்துள்ளார்.

கடந்த வருடம், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்ஸி, அதிபர் ட்ரம்பை அவரது ஓவல் ஆபீசில் சந்தித்த போது, விஜயாவும் அப்போது அவர்களுடன் இருந்தார்.. அதேபோல, 2018-ல் நம் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போதும் இவர் இருந்துள்ளார்... மொத்தத்தில் சோஷியல் மீடியாவில் மிகவும் வலிமை மிக்க பெண்மணி என அமெரிக்க நாளேடுகளே இவரை பற்றி புகழாரம் சூட்டி இருக்கின்றன.

English summary
Donald Trump twitter ban by Indian American Woman Vijaya Gadde
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X