வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது - டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது. ஏனென்றால் மக்களுக்கு தனிச் சுதந்திரம்இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : எல்லோரும் மாஸ்க் அணிந்துவிட்டால் கொரோனா மறைந்துவிடும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மக்களை மாஸ்க் அணியும்படி கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீயாய் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 63,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 38,33271 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. இதுவரை 11 லட்சம் பேர் வரை குணமடைந்திருந்தாலும் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தொடப்போகிறது என்றாலும் அந்த நாட்டு மக்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. மாஸ்க் அணிவதற்கு பெரும்பாலானவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

Donald Trump vows not to order Americans to wear masks

அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசும், அரசியல் தலைவர்களும் மக்களை கட்டாயமாக மாஸ்க் அணியும்படி உத்தரவிட வேண்டுமென அமெரிக்காவின் முன்னணி தொற்று நோயியல் வல்லுநரான அந்தோணி ஃபவுசி வலியுறுத்தியுள்ளார். எல்லோரும் மாஸ்க் அணிந்துவிட்டால் கொரோனா மறைந்துவிடும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்
கூறியுள்ளார். மக்களை மாஸ்க் அணியும்படி கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இடி மின்னலுடன் இரவில் கொட்டிய திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பால் விடிய விடிய இருளில் தவிப்புஇடி மின்னலுடன் இரவில் கொட்டிய திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பால் விடிய விடிய இருளில் தவிப்பு

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்

    தொடர்ந்து பேசிய ட்ரம்ப், டாக்டர் அந்தோணி ஃபவுசி, நமது ஜெனரல் அறுவை சிகிச்சை வல்லுநர் ஆகியோர் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று கூறினர். மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என கூறிய அனைவருமே தற்போது மாஸ்க் அணிய வேண்டுமென கூறுகின்றனர். மாஸ்க் அணிவதால் பல்வேறு பிரச்சினைகளும் வரும் என்பது நமக்கு தெரியும்.அமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது எனவும் மக்களுக்கு தனிச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்

    English summary
    US President Donald Trump has vowed not to order Americans to wear masks to contain the spread of coronavirus. Trump said he didn't agree with a national mask mandate, saying people should have a certain freedom.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X