வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்.. பதுங்குகுழிக்கு அழைத்து செல்லப்பட்டாரா டொனால்ட் டிரம்ப்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கருப்பின இளைஞர் படுகொலை விவகாரத்தை கண்டித்து போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பதுங்குகுழிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

Recommended Video

    பதுங்குகுழிக்கு அழைத்து செல்லப்பட்டாரா டொனால்ட் டிரம்ப்?

    கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்காவில் 25 நகரங்களில் போராட்டம் வலுத்துள்ளன. இந்த போராட்டம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    ஜார்ஜ் பிளாய்டு படுகொலை.. வெள்ளை மாளிகை முற்றுகை.. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசிய போலீஸ் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை.. வெள்ளை மாளிகை முற்றுகை.. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசிய போலீஸ்

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதையடுத்து தேசிய பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டனர். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை துப்பாக்கியால் சுட உத்தரவிட்டிருப்பேன். ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கவில்லை.

    தள்ளுமுள்ளு

    தள்ளுமுள்ளு

    அவர்களே சாமர்த்தியமாக போராட்டக்காரர்களை கலைத்தனர் என்றார். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து டொனால்ட் டிரம்பின் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு கருதி அவரை பதுங்கு குழிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    தகவல்கள்

    தகவல்கள்

    அவர் அடுத்த நாளான சனிக்கிழமையும் பதுங்கு குழியில் இருந்தாரா என தெரியவில்லை. அது போல் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் தீவிரம் அடைந்ததால் அவர் நேற்றைய தினமும் பதுங்கு குழியில் தங்கியிருந்தாரா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

    நியூயார்க் டைம்ஸ்

    நியூயார்க் டைம்ஸ்

    இது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் மெலினா டிரம்பும் பாரன் டிரம்பும் பதுங்கு குழிக்கு அழைத்து செல்லப்பட்டனரா என தெரியவில்லை. இந்த ஆக்ரோஷமான போராட்டத்தால் டிரம்ப்பின் பாதுகாப்பு படைவீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    English summary
    US President Donald Trump was taken to underground bunker during White house protest asking justice for George Floyd's death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X