வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் முறையாக முக கவசம் அணிந்தார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பொது இடத்தில் முதல் முறையாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முக கவசம் அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 1,28,42,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவால் 5,67,649 பேர் உயிரிழந்துள்ளனர்.

போலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை போலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை

யு.எஸ். பாதிப்பு

யு.எஸ். பாதிப்பு

அமெரிக்காவில் ஒரேநாளில் 61,719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 33,55,646 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 732 பேர் உயிரிழந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,37,403 ஆக உயர்ந்துள்ளது.

டிரம்ப்பும் மாஸ்க்கும்..

டிரம்ப்பும் மாஸ்க்கும்..

ஆனாலும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பொதுவாக அனைத்து இடங்களிலும் முக கவசம் இல்லாமல்தான் வலம் வந்தார். செய்தியாளர்களை சந்தித்த போதும் சரி பல்வேறு ஆலோசனை கூட்டங்களிலும் சரி முக கவசம் அணியாமல்தான் இருந்தார் டொனால்ட் டிரம்ப். அப்படி முக கவசம் அணிந்தால், தமது உடல்நிலை பலவீனமாக இருப்பதாக நினைத்துவிடுவார்கள் என விளக்கம் கூறிவந்தார் டிரம்ப்.

மாஸ்க் பிரசாரம்

மாஸ்க் பிரசாரம்

அதேநேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்கிற பிரசாரத்தை அமெரிக்கா படுதீவிரமாக முன்னெடுத்தது. இருப்பினும் டிரம்ப் மட்டும் முக கவசம் அணியாமல் இருந்தார். இந்த நிலையில் வாஷிங்டன் புறநகரில் ராணுவ மருத்துவமனைக்கு சென்று டிரம்ப் பார்வையிட்டார்.

Recommended Video

    America-போகவே விருப்பமில்லை, Kerala-தான் வேணும் - 74 Year Old US Citizen
    முதல் முறை முக கவசம்

    முதல் முறை முக கவசம்

    அப்போது முதல் முறையாக முக கவசத்தை டிரம்ப் அணிந்திருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப், மருத்துவமனைகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது மிக முக்கியமானது என்றார். அமெரிக்காவில் டிரம்ப் மிகவும் தாமதமாக முக கவசம் அணிந்திருப்பதை முன்வைத்தும் விவாதங்கள் கிளப்பிவிட்டன.

    English summary
    President Donald Trump wore a mask during a visit to a military hospital on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X