வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலாஸ்காவில் டொனால்ட் டிரம்ப் வெற்றி.. வட கரோலினா, ஜார்ஜியாவில் ஓட்டு எண்ணிக்கை தொடர்கிறது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், அலாஸ்கா மாகாணத்தை, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வென்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி ஒரு வாரம் கழித்து இந்த முடிவு வெளியாகியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், அதிபர் டிரம்பிற்கு 3 ஓட்டுக்கள் இந்த மாகாணத்தில் கிடைத்துள்ளன. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களுக்குத்தான் பொதுவாக அலாஸ்கா ஆதரவு அளிக்கும். ஆனால் இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான, அதிபர் டிரம்பின் முன்னிலை வழக்கத்தை விட குறைவான அளவுக்குதான் இருந்தது. அதாவது, 10 புள்ளிகளுக்குள் அல்லது குறைவாக இருந்தது.

Donald Trump wins Alaska after losing US presidency

ட்ரம்பிற்கு கிடைத்த இந்த 3 ஓட்டுக்களால் தேர்தல் முடிவில் மாற்றம் வரப்போவதில்லை. ஜோ பிடன்தான் அதிபர் என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில், அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட ஊடகங்கள் கடந்த சனிக்கிழமையே, ஜோ பிடன் 290 ஓட்டுக்களை பெற்றுவிட்டதாகவும், டிரம்ப் 217 ஓட்டுக்களைத்தான் பெற்றதாகவும் அறிவித்தன.

"பிரதமர் மோடிக்கு நன்றி.." பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு நிதிஷ் குமார் வெளியிட்ட முதல் கமெண்ட்

அமெரிக்காவில் இன்னும் 2 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடருகிறது. வட கரோலினா மாகாணத்தில் டிரம்ப் 70,000 பொது வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார், ஜார்ஜியாவில் பிடன் சுமார் 14,000 பொது வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

English summary
US President Donald Trump defeated President-elect Joe Biden in Alaska, Edison Research projected on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X