வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ மை கடவுளே.. "HAPPY GOOD FRIDAY".. துக்க தினத்துக்கு வாழ்த்து சொல்லி வாங்கி கட்டி கொண்ட டிரம்ப்!

ஹேப்பி குட் ஃபிரைடே என்று டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: துக்க நாளுக்கு டிரம்ப் வாழ்த்து சொல்லி உள்ளார்.. ஆம்.. "HAPPY GOOD FRIDAY TO ALL" என்று ட்வீட் போட்டு எல்லாரிடமும் வசமாக சிக்கி வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார்!

Recommended Video

    கொரோனாவுடன் கைகோர்க்க இருக்கும் புயல்... அச்சத்தில் அமெரிக்கா

    அதிபர் ட்ரம்ப் என்ன செய்தாலும் அது ஏடாகூடம்தான்... வாயை திறந்தாலும் அது பஞ்சாயத்துதான்... அவருக்கே தெரியாமல் யதேச்சையாக நடந்த ஒரு சம்பவத்தினை வைத்து நெட்டிசன்கள் வாரி வறுத்தெடுத்து வருகின்றனர்.

    அதிபரின் நடவடிக்கை, அதிபரின் பேச்சு, அதிபரின் செயல் பலருக்கு அதிருப்தி தரக்கூடியதாகவே இருப்பதால்தான் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விடுவார்கள். இப்போது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்... உலக நாடுகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறார்.. ஆனாலும் அதே கெத்துடன் பேட்டி தருவதும், மற்ற நாடுகளை மிரட்டுவதும் அதிபரை விட்டு போகவில்லை.

    சிலுவை

    சிலுவை

    இப்படிப்பட்ட சூழலில் சும்மா இல்லாமல் ஒரு ட்வீட்டை போட்டு அனைவரிடமும் மேலும் வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார்.. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரித்தனர்.. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட நாள்தான் புனித வெள்ளியாக நினைவு கூறுவார்கள். இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவை சாவையும் நினைவுகூர்ந்து வழிபடும் ஒரு துக்கமான நாள் இது!

    விளாசினர்

    விளாசினர்

    இந்த துக்க நாளுக்கு டிரம்ப் வாழ்த்து சொல்லி உள்ளார்.. ஹேப்பி குட் ஃபிரை டே, "HAPPY GOOD FRIDAY TO ALL" என்று ட்வீட் போட்டு எல்லாரிடமும் வசமாக சிக்கி கொண்டுள்ளார். "உங்களுக்கு கிறிஸ்துவம் பற்றி எதுவுமே தெரியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.. இந்த புனித வெள்ளியில் மகிழ்ச்சி எல்லாம் ஒன்னும் கிடையாது.. ஈஸ்டர் ஞாயிறுக்காக காத்திருக்க முடியவில்லை" என்று ஒருவர் டிரம்ப்பை விளாசி தள்ளினார்.

    ஹேப்பி வெள்ளி

    ஹேப்பி வெள்ளி

    "இது கிறித்துவர்களுக்கு மிக முக்கியமான நாள்.. இதை யாரும் ஹேப்பி வெள்ளி என்று சொல்ல மாட்டார்கள்.. பேர்ல் ஹார்பரின் முக்கியத்துவத்தை தெரியாததுபோல், பைபிளின் கூற்றுப்படி புனித வெள்ளி அன்று என்ன நடந்தது என்பதும் நம் அதிபருக்கு தெரியவில்லை" என்று மற்றொருவர் சாடியுள்ளார். இதனிடையே புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

    நொறுங்கிய இதயம்


    அதில் டிரம்ப் கலந்து கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "இன்று புனித வெள்ளி, இந்த ஞாயிறு கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் நாளை, இயேசு உயிர்த்தெழுந்த நாளை கொண்டாடுவார்கள்.. இந்தப் புனித நாளில் கடவுள் நோயுற்றவர்களின் நோயை குணப்படுத்துவார்.. நொறுங்கிய இதயம் உடையவர்களை தேற்றுவார்.. நம் ஹீரோக்களை ஆசீர்வதிப்பார்... நம் கதை விரக்தியில் முடிவதல்ல.. அது வெற்றியில் மீண்டும் எழுதலில் உள்ளது என்பதை நினைவூட்டும் நாள்" என்று பேசினார்.

    எல்லாம் சரிதான்.. HAPPY GOOD FRIDAY என்று ஏன் டிரம்ப் சொன்னாரு??!!

    English summary
    donald trump wishes happy good friday and tweeted on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X