வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புடைய பிடனுக்கு.. திறந்த மனதுடன் கடிதம் எழுதிய டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியில் நேற்றுடன் விடை பெற்ற டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பாரம்பரியத்தின் படி, தனக்கு திறந்த மனதுடன் கடிதம் எழுதியுள்ளார் என ஜோ பிடன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்ற பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தனக்கு திறந்த மனதுடன் டிரம்ப் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். என்றார்.

Donald Trump Wrote A Very Generous Letter: Joe Biden

முன்னதாக அமெரிக்காவின் வழக்கப்படி பதவியில் இருந்து விடைபெறும் அதிபர்கள், புதிதாக வரும் அதிபர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்கம், அந்த பாரம்பரியத்தை கடைபிடித்து பிடனுக்கு டிரம்ப் கடிதம் எழுதுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் அமெரிக்க அதிபர்கள் இதுவரை கட்டிக்காத்து வந்த பல்லாண்டு மரபுகளை உடைத்து பதவி ஏற்பு விழாவில் பங்கேற்காமல் குடும்பத்தை கூட்டிக் கொண்டு சொந்த ஊரான புளோரிடாவுக்கு சென்றுவிட்டார் டிரம்ப்.

இந்த சூழலில் தான் பிடன் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் பேசும் போது, தனக்கு டிரம்ப் உருக்கமாக கடிதம் எழுதியிருப்பதை குறிப்பிட்டார், ஆனால் கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்கள் என்ன என்பதை பிடன் கூறவில்லை.

பிடன் அதிபராக பதவி ஏற்ற பின்னர்,. டிரம்ப்பின் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு எதிரான 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் டிரம்பின் கொள்கைகளில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.

English summary
US President Joe Biden said Wednesday that outgoing president Donald Trump had left him a "very generous" letter in the Oval Office, in keeping with tradition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X