வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம் என டொனால்ட் டிரம்ப் செய்தியாளரிடம் ஆவேசமடைந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பும் ஜோ பிடனும் போட்டியிட்டனர். இதில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். எனினும் இதை டிரம்ப் ஏற்க மறுத்து ஜோ பிடன் மீது தேர்தல் மோசடி புகாரை கூறி வருகிறார்.

இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் வெள்ளை மாளிகையில் நிருபர் ஜெஃப் மேசன், அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பிடனுக்கு எதிரான உங்களது தோல்வியை ஒப்புக் கொள்கிறீர்களா என டிரம்பை பல முறை கேட்டார்.

Dont ever talk to the president that way, says Trump

இதனால் டிரம்பிற்கு கோபம் உச்சத்தில் சென்றது. அப்போது நான் அமெரிக்காவின் அதிபர். என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம். நான் தேர்தலில் தோல்வி அடையவில்லை. இது மோசமான தேர்தல்.

அடுத்தடுத்து தோல்வி... கடைசி வாய்ப்பும் போச்சு... என்ன செய்ய போகிறார் டிரம்ப்!அடுத்தடுத்து தோல்வி... கடைசி வாய்ப்பும் போச்சு... என்ன செய்ய போகிறார் டிரம்ப்!

3ஆவது உலக போரை போன்ற தேர்தல் ஆகும். மோசடி காரணமாக ஜோ வெற்றி பெற்றார். நிச்சயமாக ஜோபிடனால் 80 மில்லியன் வாக்குகளை எடுத்திருக்க முடியாது என்றார் டிரம்ப்.

வழக்கமாக கடந்த 4 ஆண்டு அதிபர் காலத்தில் நடந்த பல சம்பவங்களைப் போலவே இந்த முறையும் டிரம்ப் கடினமாக யாரேனும் நிருபர் கேட்டால் கோபமடைவது போல் தற்போதும் கோபமடைந்தார்.

English summary
Donald Trump says dont ever talk to the President that way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X