வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடுப்பளவு தண்ணீர்.. 250 கி.மீ.வேகத்தில் காற்று.. 5 பேர் பலி.. பஹாமாஸில் பேயாட்டம் ஆடிய டோரியன் புயல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பஹாமாஸில் பேயாட்டம் ஆடிய டோரியன் புயல் | washington dorian cyclone

    வாஷிங்டன்: அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாஸில் டோரியன் புயல் கரையை கடந்த போது ருத்ர தாண்டவம் ஆடியது. தற்போது அமெரிக்கா நோக்கி அந்த புயல் செல்கிறது.

    கரீபியன் தீவுகளுக்கு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயலுக்கு டோரியன் என பெயரிடப்பட்டது. இந்த புயல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவை திங்கள்கிழமை தாக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியது.

    இதையடுத்து பஹாமாஸை தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காற்றின் வேகம், மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை மக்கள் வைத்திருந்தனர்.

    ஆஹா இம்ரான்கானா இது.. காஷ்மீர் விவகாரத்தில் போர்.. பல்டி அடித்த பாகிஸ்தான்ஆஹா இம்ரான்கானா இது.. காஷ்மீர் விவகாரத்தில் போர்.. பல்டி அடித்த பாகிஸ்தான்

    வேகம்

    வேகம்

    இந்த புயலானது நேற்று முன் தினம் வடக்கு பஹாமாஸ் அருகே அபாகோ தீவில் உள்ள எல்போகே பகுதியில் கரையை கடந்தது. பின்னர் நேற்று காலை பஹாமாஸ் தீவுகளை புயல் கடுமையாக தாக்கியது. புயலின்போது மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    5 பேர் பலி

    5 பேர் பலி

    புயலின் வேகத்தால் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. கடல் கொந்தளிப்பால் அலைகள் ஆர்ப்பரித்தன. கனமழையால் சாலையில் 3 அடிக்கு தண்ணீர் உயர்ந்திருந்தது. புயலுக்கு இதுவரை 5 பேர் பலியாகினர் என தெரிகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    அது போல் பொருட்சேதமும் அதிகமாகவே இருந்தன. இந்த புயல் தற்போது கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    60க்கும் மேற்பட்டோர் பலி

    60க்கும் மேற்பட்டோர் பலி

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் டோரியன் புயல் மிகக் கொடூரமாக உள்ளது. இதனால் அமெரிகாகாவின் கிழக்கு கடலோர பகுதி மிகவும் பாதிக்கப்படும் என கூறியுள்ளார். முன்னதாக கடந்த 1992-ஆம் ஆண்டு டோரியன் போன்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது. அப்போது 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    English summary
    Hurricane Dorian hits America's Bahamas islands very badly which blows 250 kmh winds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X