வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க தேர்தல்.. இப்பவே அலை அலையாக ஓட்டு போட்ட மக்கள்.. 2016 தேர்தலை விட அதிகம்.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2020 அமெரிக்கத் தேர்தலில் இதுவரை பதிவான, Early Voting கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு பல மாகாணங்களில் ஏர்லி வோட்டிங்கில் மக்கள் ஆர்வத்தோடு பங்கெடுத்து வருகிறார்கள்.

தேர்தல் 3ம் தேதிதான் என்றபோதிலும், நம்மூரைப் போலன்றி, Early Vote என்ற நடைமுறை அமெரிக்காவில் உண்டு. வாக்குப் பதிவு நாளன்று நீண்ட கியூவில் வாக்காளர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில், முன்கூட்டியே வாக்களிக்க இப்படி வசதி செய்யப்படுகிறது.

பெங்களூர் யாருக்கு.. பார் ஓனர் கொலையின் பரபர பின்னணி.. டிவி சேனலுக்கு வந்த பகீர் கால்.. கேங் வார்?பெங்களூர் யாருக்கு.. பார் ஓனர் கொலையின் பரபர பின்னணி.. டிவி சேனலுக்கு வந்த பகீர் கால்.. கேங் வார்?

காரணங்கள்

காரணங்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலம் என்பதால், வாக்குச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் எச்சரிக்கை உணர்வோடு மக்களும் இப்போதே அதிகம் ஓட்டு போடுகிறார்கள் என்றும், டிரம்புக்கு எதிரான அலை என்றும் இருவேறு கருத்துக்கள் அமெரிக்காவில் நிலவுகிறது.

அதிக மக்கள்

அதிக மக்கள்

புளோரிடா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்புப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இதுவரை 59 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது ஏர்லி ஓட்டிங் மற்றும் இ மெயில் மூலம் செலுத்திய வாக்குகளை விட அதிகம்.

தேர்தல் நாளில் ஓட்டு

தேர்தல் நாளில் ஓட்டு

இதுவரை, ஜனநாயகக் கட்சி அதாவது பிடன் பக்கம்தான் அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளதாம். மெயில் மூலம் வாக்களிக்க வேண்டாம் என ட்ரம்ப் வலியுறுத்துகிறார். அதில் முறைகேடு நடந்துவிடும் என்கிறார். எனவே, குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் நாளில் நேரில் வந்து அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்புக்கு எதிரான அலை?

ட்ரம்புக்கு எதிரான அலை?

மக்கள் அதிகமாக இப்போதே ஓட்டுப் போட்டது கொரோனா அச்சத்தால் மட்டுமா, அல்லது, டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான அதிருப்தியால், மக்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதா என்ற பேச்சும் அமெரிக்காவில் தீவிரமாகியுள்ளது. 1980 ல் இருந்து குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதை பாரம்பரியமாக வைத்துள்ள பழமைவாத கோட்டையான டெக்சாஸில், கூட, சில கருத்துக் கணிப்புகள், ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறியுள்ளன. அப்படியானால் மக்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

English summary
Early voting in the 2020 US election has surpassed all the pre-election ballots from four years earlier, an independent vote monitor said Sunday, with nine days still to go before the November 3 poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X