"வாவ்"45 ஆண்டுகளுக்கு முன் ஏலியன்கள் அனுப்பிய அந்த மெசேஜ்! எங்கிருந்து வந்ததுனு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க
வாஷிங்டன்: வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 1977இல் பூமியில் ரெக்கார்ட் செய்யப்பட்ட சிக்னலில் இருக்கும் மர்மம் இப்போது விலகி உள்ளது.
இந்த பிரபஞ்சம் குறித்துத் தெரிந்து கொள்ள உலகெங்கும் தீவிர ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாகவே நமது பிரபஞ்சத்தில் தொலைதூரத்தில் இருக்கும் மற்ற கிரகங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது
பென்ஸ் கார் பலாத்காரம்! வசமாய் சிக்கிய 'புள்ளி’..! 5 பேரில் 3 சின்னப்பசங்க வேற! திடுக்கிட்ட போலீசார்
இந்த கேலக்ஸியில் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழக்கூடிய கிரகமாக இருக்காது என்பது ஆய்வாளர்களின் எண்ணம். கேலக்ஸியில் உயிரினங்கள் வாழும் மற்ற கிரகங்களைக் கண்டறியும் முயற்சியில் தான் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

45 ஆண்டுகள்
அப்படி மற்ற கிரகங்களில் வசிக்கும் வேற்று கிரக வாசிகளைத் தொடர்புகொள்ளும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. நாசா கூட சமீபத்தில் மனித உருவங்கள் உடன் கூடிய படத்தை விண்வெளிக்கு அனுப்பி இருந்தது. இந்தச் சூழலில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 1977ஆம் ஆண்டிலேயே வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து நமக்கு மெசேஜ் வந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1 நிமிடம் 12 வினாடிகள்
கடந்த 1977 ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு சுமார் 11:16 மணிக்கு, ரேடியோ தொலைநோக்கியில் இந்த விசித்திரமான சமிக்ஞை ரெக்கார்ட் செய்யப்பட்டது. இந்த சமிக்ஞை சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் நீடித்தது. பிக் இயர் ரேடியோ தொலைநோக்கி மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்ட இந்த மெசேஞ் தான் வேற்று கிரக வாசிகளின் இருப்பு குறித்த முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

வாவ்
விசித்திரமான இந்த சிக்னலை, வானியலாளர் ஜெர்ரி எஹ்மான் பதிவு செய்தார். இதனைப் பகுப்பாய்வு செய்த ஆய்வாளர்கள் ஏலியன்கள் "வாவ்" என்ற மெசேஜை அனுப்பி உள்ளதாகக் குறிப்பிட்டனர். அப்போது முதலே இந்த வாவ் மேசேஜ் தான் வேற்று கிரக வாசிகளின் ஆய்வுகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்த மெசேஜ் நீடித்தது வெறும் 72 நொடிகள் தான் என்றாலும் கூட, இது எங்கிருந்தது வந்தது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்களுக்கு சுமார் 45 ஆண்டுகள் பிடித்துள்ளது.

எங்கு இருந்து
இந்த சிக்னல் பூமியிலிருந்து சுமார் 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Sagittarius விண்மீன் தொகுப்பில் உள்ள சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தில் இருந்து வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து வானியலாளர் ஆல்பர்டோ கபல்லரோ கூறுகையில், "வேற்றுக்கிரக வாசிகளைத் தொடர்பு கொள்ள நாமும் சில ரேடியோ சிக்னல்களை அனுப்பி உள்ளோம். அதை ஆய்வு செய்தால், எந்தவொரு சிக்னலும் இவ்வளவு நீண்டதாக இருந்தது இல்லை.

வேற்றுக்கிரக வாசிகள்
இப்போது அங்கு இருக்கும் ஒரு வேற்று கிரக நாகரீகம் நம்மைப் போலவே ரேடியோ சிக்னல் மூலம் நம்மைத் தொடர்பு கொள்ள முயன்று இருக்கலாம். அது தான் அந்த வாவ் சிக்னலாக இருக்கும்" என்று கூறினார். இந்த வாவ் சிக்னலை அனுப்பியது யார் என்பதைக் கண்டறிய வானியலாளர்கள் ஜி வகை நட்சத்திரங்களையும் கே வகை நட்சத்திரங்களையும் ஆய்வு செய்தனர். பூமியில் உயிரினங்கள் தோன்றச் சூரியன் முக்கியம். சூரியின் ஒரு ஜி வகை நட்சத்திரம் என்பதால் அதற்கு ஒத்த நட்சத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அந்த கிரகம்
அதேபோல மனிதர்கள் வாழ கூடிய சூழலைக் கொண்ட ஹோஸ்ட் கிரகங்களான கே வகை நட்சத்திரத்தையும் வானியலாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் இறுதியில் தான் 2MASS 19281982-2640123இல் இருந்து இந்த மெசேஞ் வந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், தற்போது நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அந்த கிரகத்தின் துல்லியமான படத்தை எடுக்க முடியவில்லை

நாசா முயற்சி
இதற்கிடையே அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் விண்வெளியில் உள்ள ஏலியன்களை தொடர்பு கொள்ள முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், அவர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் நாசா பைனரி செய்திகளைக் கொண்ட மெசேஜ்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. சில அறிவியல் ஃபார்முலாக்கள் மற்றும் ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண டிஜிட்டல் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இரட்டை ஹெலிக்ஸ் டிஎன்ஏ அமைப்பு மற்றும் பூமியில் ஈர்ப்பு விசையைக் குறிக்கும் வகையில் கீழ்நோக்கி விழும் ஒரு பொருள் உள்ளது.