வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ஹேப்பியில் பிடன்.. அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி உறுதியானது.. டிரம்ப்புக்கு மீண்டும் பின்னடைவு

எலக்டோரல் காலேஜ் வாக்குகளை அள்ளினார் ஜோ பிடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் ஜோபிடனின் வெற்றி மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஜோ பிடன் வெற்றியை எலக்டோரல் காலேஜ் தேர்வாளர்கள் குழு உறுதி செய்துள்ளது.. இதில், பிடன் அமோகமாக வெற்றி பெற்றுவிட்டார்.. இதையடுத்து, டிரம்பால் இப்போதைக்கு எதுவுமே செய்ய முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது.. அதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார்.. பொதுவாக, அதிபரை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றாக வேண்டும் என்பது விதி.

இந்நிலையில், அதிபரை தேர்வு செய்வதற்கான எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது.. இதில் 50 மாகாணங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர்... அதாவது, அரிசோனாவில் 11 பேர், ஜார்ஜியாவில் 16 பேர், நெவடாவில் 6 பேர், பென்சில்வேனியாவில் 20 பேர், விஸ்கான்சினில் 10 பேர் என்று ஜோ பைடனுக்கு வாக்குகள் செலுத்தப்பட்டன.

வாக்களிப்பு

வாக்களிப்பு

மேலும், அந்தந்த மாகாணங்களில் தேர்வாளர் குழுவினர், அதிபர், துணை அதிபரை தேர்ந்தெடுத்து வாக்களித்து கையெழுத்துமிட்டனர்.. இந்த தேர்வாளர் குழுவினர் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகளில் எதுவும் மாற வாய்ப்பில்லை என்றாலும், அதிபராவதற்கு இவர்களது அங்கீகாரம் ரொம்பவே அவசியமானது.

அதிபர்

அதிபர்

அந்த வகையில், கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை பிடன் பெற்றார்.. இதன் காரணமாக 270 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் பதவியை கைப்பற்றுவதை பிடன் மறுபடியும் உறுதி செய்திருக்கிறார்... இதில், பிடனுக்கு 306 வாக்குகளும், டிரம்பிற்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தோல்வி

தோல்வி

பிடன் அதிபராக பதவியேற்பதற்கு, இந்த நடைமுறை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.. ஏனென்றால், தன் தோல்வியை இப்போது வரை டிரம்ப் ஏற்கவே இல்லை.. பிடன் வெற்றியை கோர்ட்டுக்கு போனார்.. அங்கேயும் அனைத்து கேஸ்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.. எனவே, இப்போதைய சூழலில் அதிபராக பிடன் பதவி ஏற்பதில் எந்தவிதமான சட்ட சிக்கலும் வரப்போவதில்லை என்று நம்பப்படுகிறது.

ஜனநாயகம்

ஜனநாயகம்

இந்த வெற்றி குறித்து பிடன் சொல்லும்போது, "சட்டத்தின் ஆட்சி, நமது அரசியலமைப்பு மற்றும் மக்களின் விருப்பம் வெற்றி பெற்று உள்ளது.. ஜனநாயகத்தின் சுடர் இந்த தேசத்தில் ரொம்ப காலத்திற்கு முன்பே பிரகாசமாக எரிய தொடங்கி விட்டது... ஒரு தொற்று நோயோ அல்லது அதிகார துஷ்பிரயோகமோ அந்த சுடரை ஒருக்காலும் அணைக்க முடியாது" என்றார்.

English summary
Electoral College makes it official: Biden won, Trump lost
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X