வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவியேற்பு விழாவில் கமலா ஹாரிசை பாதுகாத்த கறுப்பின போலீஸ் அதிகாரி..யார் இவர்? என்ன ஸ்பேஷல்? படிங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: துணை அதிபர் கமலா ஹாரிசை பதவியேற்பு விழாவுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றவர்களில் காவல்துறை அதிகாரி யூஜின் குட்மேன் மிகவும் கவனம் ஈர்த்தார்.

அண்மையில் நாடளுமன்றத்தில் வெறியாட்டம் போட்ட வன்முறையாளர்களை யூஜின் குட்மேன் தனியாக சமாளித்த விதம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

கமலா ஹாரிஸ் பதவியேற்பு

கமலா ஹாரிஸ் பதவியேற்பு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்புக்காக வெள்ளை மாளிகை, தலைநகர் வாஷிங்டன் உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கவனம் ஈர்த்த அதிகாரி

கவனம் ஈர்த்த அதிகாரி

அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு முதல் விழா முடிந்து அவர்கள் திரும்பி செல்லும் வரை தனித்தனியாக அவர்களை சுற்றி போலீசார், பாதுகாப்பு படையினர் அவர்களை பாதுகாத்தனர். இந்த நிலையில் துணை அதிபர் கமலா ஹாரிசை பதவியேற்பு விழாவுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றவர்களில் காவல்துறை அதிகாரி யூஜின் குட்மேன் மிகவும் கவனம் ஈர்த்தார்.

கேப்பிட்டல் வன்முறை

கேப்பிட்டல் வன்முறை

மற்ற அதிகாரிகளும் பாதுகாப்பில் இருக்க, யூஜின் குட்மேன் மட்டும் என்ன ஸ்பெஷல் என நீங்கள் கேட்கலாம். கடந்த 6-ம் தேதி அமெரிக்கா நாடளுமன்றத்தில் நடந்த வன்முறை அமெரிக்க மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் போலீஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூர்க்கத்தனமாக கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையாளர்கள் வெறியாட்டம் போட்டனர்.

தனியாக சமாளித்தவர்

தனியாக சமாளித்தவர்

போலீசார், பாதுகாப்பு படையினர் சிலரே இவர்களை கட்டுப்படுத்த திணறியபோது, காவல்துறை அதிகாரி யூஜின் குட்மேன் வன்முறையாளர்களை தனியாக சமாளித்த விதம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. கேபிட்டலின் ஒரு பகுதியை முன்னோக்கி வன்முறையாளர்கள் சென்றபோது, தனி ஆளாக அவர்களை தடுத்து நிறுத்திய யூஜின் குட்மேன், அவர்களை திசை திருப்பி, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளை
பாதுகாப்பாக வெளியேற வழி செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரின் மனதிலும் இடம் பிடித்தவர் யூஜின் குட்மேன் ஆவார்.

இருவருக்கும் ஒற்றுமை

இருவருக்கும் ஒற்றுமை

இவர்தான் தற்போது துணை அதிபர் கமலா ஹாரிசை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்கும் முதல் கறுப்பின பெண் கமலா ஹாரிஸ் ஆவார். அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற யூஜின் குட்மேனும் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police Officer Eugene Goodman was among those who escorted Vice President Kamala Harris safely to the inauguration ceremony
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X