வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி ரெடி.. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு போட பரிந்துரை.. அமெரிக்கா அதிரடி

பூஸ்டர் டோஸ்களை செலுத்த போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைவருக்கும் "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 8 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் போடுவது சிறந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கருதுகிறார்கள்.

உலகம் முழுவதும் தொற்று கவ்வியுள்ள நிலையில், ஒவ்வொரு அலை பரவலாக மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது.. கொரோனாவைரஸ் முதல் அலையைவிட, இந்த 2வது அலையின் தீவிரம் வீரியமானதாக இருந்தது.. அதனால்தான் லட்சக்கணக்கானோரையும் பலி கொண்டது.

இதனை தொடர்ந்து பல நாடுகளில் 3-வது அலை பரவி கொண்டிருக்கிறது.. சில நாடுகளில் 4 வது அலையும் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. இதனால் நித்தம் நித்தம் இதுகுறித்து விஞ்ஞானிகள் நம்மை அலர்ட் செய்து, கொண்டிருக்கிறார்கள்.

பூஸ்டர் டோஸ் தேவையில்லை.. 2 டோஸ் தடுப்பூசியே போதும்.. தீவிர கொரோனாவையும் தடுக்கும்: ஆய்வில் தகவல் பூஸ்டர் டோஸ் தேவையில்லை.. 2 டோஸ் தடுப்பூசியே போதும்.. தீவிர கொரோனாவையும் தடுக்கும்: ஆய்வில் தகவல்

வைரஸ்

வைரஸ்

மருந்துகள், சிகிச்சைகள் எதுவும் இந்த கொரோனா வைரஸுக்கு தீர்வாக இல்லாத சூழலில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆறுதலாக உள்ளது.. எனவே, உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.. சில நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசியை முழுமையாக போட்டு முடித்து விட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ் முழுமையாக போட்டு முடித்துவிட்டனர்.. சில நாடுகளில் 2 டோஸ்களையுமே முடித்துவிட்டு, 3வது தடுப்பூசிகளை செலுத்த முயன்று வருகின்றனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த 3வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதைதான் பூஸ்டர் என்கிறார்கள்.. இநத் பூஸ்டர் டோஸை செலுத்த சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. அந்த வகையில், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்திருந்தனர்.. காரணம், அமெரிக்காதான் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

 8 மாதங்கள்

8 மாதங்கள்

2வது டோஸ் தடுப்பூசி போட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வயது வித்தியாசமின்றி எல்லாருக்குமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வல்லுநர்கள் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 8 மாதங்களை நிறைவடைந்த மக்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிபர் ஜோபிடனும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்... இந்நிலையில், இந்த பணியை அடுத்த வாரத்தில் தொடங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாம்.

 பைசர்

பைசர்

அதுமட்டுமல்ல, தாங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 16 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் 3வது தவணையாக போட அனுமதிக்குமாறு பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.. ஆனால், இதற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் வல்லுநர் குழு சம்மதம் தெரிவிக்கவில்லை.. தரவுகள் போதுமான அளவில் இல்லை என்பதால், இது இளம் வயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காரணம் சொல்லி மறுத்துள்ளனர்.

பூஸ்டர்

பூஸ்டர்

மற்றொருபுறம் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது... இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக 18 வல்லுநர்களும் வாக்களித்தனர்... உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இது தொடர்பாக விரைவில் ஆலோசனையும் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
FDA panel endorses covid19 boosters for older adults and those at risk of serious illness
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X