வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோடிக்கணக்கானோர் உயிரைக் குடித்த.. கொடூரன்.. கொரோனாவுக்கு இன்று ஒரு வயது!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் எனும் உயிரை குடிக்கும் தொற்று நோய் உலகில் பரவி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. சுருக்கமாக சொல்ல போனால் கொரோனாவுக்கு இன்று பிறந்தநாள்...

கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு தொடங்கி இன்று உலகளவில் 5.53 கோடி மக்களை பாதித்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். தினமும் குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கு வரை இந்த நோய் பரவி வருகிறது.

சீனாவில் ஒரு வெட் மார்க்கெட்டில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. சீனாவில் மட்டும் வந்த இந்த வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்! இந்த லிஸ்டில் வரப்போகும் 4 மாவட்டங்கள்!தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்! இந்த லிஸ்டில் வரப்போகும் 4 மாவட்டங்கள்!

உயிரிழப்பு

உயிரிழப்பு

இந்த கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம், உலக நாடுகளின் பொருளாதாரம், உயிரிழப்பு, பொருட்சேதம், பொருளாதார வளர்ச்சி என அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீள்வதற்காக வல்லரசு நாடுகளும் மண்டையை போட்டு பிய்த்து கொள்கின்றன.

சமூகவலைதளம்

சமூகவலைதளம்

இந்த நிலையில் கொரோனாவுக்கு இன்று பிறந்தநாள் என சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பிறந்தநாள் என்றால் அனைவரும் வாழ்த்துவர். ஆனால் இந்த கொரோனாவை சமூகவலைதளங்களில் தூற்றி வருகிறார்கள். இந்த கொரோனா மொத்ததத்தில் மக்களின் சந்தோஷத்தை பறித்துவிட்டது என்கிறார்கள்.

முதியவர்

முதியவர்

சீனாவில் முதலில் தோன்றிய இந்த வைரஸ் ஹூபேய் மாகாணத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி 55 வயது முதியவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதே நவம்பர் மாதத்தில் 4 ஆண்களும் 5 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் யாருக்கு முதலில் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

குழந்தைகள்

குழந்தைகள்

இந்த அரக்கனால் பள்ளிகளில் ஓடியாடும் குழந்தைகள் இன்று வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரு வேளை உணவில்லாவிட்டாலும் கவலை மறந்து நண்பர்களுடன் சிரித்து பேச வேண்டிய மாணவர்கள் ஆன்லைன் கிளாஸால் வேதனையில் உள்ளார்கள். சனி, ஞாயிறு, விடுமுறை நாள் வந்தால் பொது இடங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இதற்கெல்லாம் எப்போது விடிவு பிறக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இந்த அரக்கனை அழிக்க தடுப்பூசி விற்பனை எப்போது?

English summary
First case of Coronavirus in the world found on 17 Nov 2019 in Hubei province.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X