வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதான் அடுப்பை "ஆஃப்" பண்ணியாச்சே.. இன்னும் பொங்கிட்டு இருக்காரே டிரம்ப்.. என்ன செய்வாரோ!

டிரம்ப்பின் அடுத்தடுத்த பிடிவாதங்கள் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டிரம்ப் பிடிவாதம் இனிமேல்தான் அதிகமாகும் என்று தெரிகிறது.. அதிபர் தேர்தலில் தோற்றுவிட்ட டிரம்ப், தன்னுடைய தோல்வியை அவ்வளவு ஈஸியாக ஒப்புக்கொண்டு அமைதியாகிவிட மாட்டார்.

தான் தேர்தலில் தோற்றுவிட்டோம் என்று டிரம்ப்பின் மனம் பதைபதைத்து கொண்டிருக்கிறது.. வாயை திறந்தால் சர்ச்சை, அடாவடி பேச்சு, மூர்க்கத்தனம், பிடிவாதம், இனவெறி, சரியான நிர்வாகமின்மை, இப்படி ஏகப்பட்ட விவகாரங்களில் சிக்கி சின்னாபின்னமானவர்தான் டிரம்ப்.

ஆனாலும், பிடனுக்கு கடைசி நேரம் வரை டஃப் கொடுத்துள்ளார்.. பிடன் அதிகாரப்பூர்வமாக அதிபராக அறிவிக்கப்பட்டும் விட்டார்.

 அதிபர்

அதிபர்

இப்போது பிரச்சனை என்னவென்றால், டிரம்ப் அவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றுக்கும் அடிபணிவாரா என்பதுதான்.. காரணம், ஜனவரி மாசம்தான் புதிய அதிபர் பதவியேற்பு நடக்க இருக்கிறது.. அதாவது இன்னும் 10 வாரங்கள் டிரம்ப்தான் அதிபராக இருக்க போகிறார்.. இந்த 10 வாரத்திலும் டிரம்ப் என்ன செய்ய போகிறார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

முதலாவதாக, இந்த தேர்தலில் தன்னை முறைகேடாக தோற்கடித்துவிட்டனர் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.. அதனால், கண்டிப்பாக ஜனநாயக கட்சியினர் மீது பல குற்றச்சாட்டை முன்வைப்பார் என்று தெரிகிறது.. அடுத்ததாக, அவரால் நியமிக்கப்பட்ட மூத்த நிர்வாக அதிகாரிகள் சிலரை பணிநீக்கம் செய்வார் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

 விசுவாசம்

விசுவாசம்

ஏனென்றால், இவர்கள் இன்னும் அதிக அளவுக்கு டிரம்ப் மீது விசுவாசமாக இல்லையாம்.. என்ன சொன்னாரோ, அதை இந்த அதிகாரிகள் செய்ய மறுத்து விட்டனராம்.. அதனால் இவர்கள் வேலைக்கு பிரச்சனை வரலாம் என்கிறார்கள். அந்த வகையில் எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ராய், பாதுகாப்பு துறை செயலாளர் மார்க் எஸ்பர், உள்ளிட்டோரும் அடக்கம் என்கிறார்கள்.. ஆனால், டிரம்ப்பின் பல நிர்வாக உத்தரவுகளை ஃபெடரல் கோர்ட் ரத்து செய்துள்ளதால், டிரம்ப்பின் உத்தரவுகள் எல்லாம் செல்லுபடியாகுமா என்பது தெரியவில்லை.

 வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

மேலும், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறாமல் பிரச்சினை செய்வார் என்றும் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படி வெள்ளை மாளிகையை விட்டு போக மாட்டேன் என்று சொன்னால், சீக்ரட் செர்வீஸ் அதிகாரிகளே அவரை வெளியேற்றுவர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் வெள்ளை மாளிகை பணியாளர்களை நியமித்தல், அதிகார மாற்றத்திற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் பைடன் தரப்பிற்கு சிரமம் ஏற்பட்டுள்தாக கூறப்படுகிறது.

 ட்விட்டர் கணக்கு

ட்விட்டர் கணக்கு

இருந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல், அதிகார மாற்றத்திற்கான இணைய தளத்தையும், ட்விட்டர் கணக்கையும் துவங்கி உள்ளது பைடன் தரப்பு.. அதில் நிறவெறியை தடுப்பது, கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளனவாம்... என்னதான் பிடன் வெற்றி பெற்றுவிட்டாலும்கூட, அடுத்தடுத்த செகண்ட்டுகளில் டிரம்ப் என்ன செய்வாரோ, ஏது செய்வாரோ என்ற எதிர்பார்ப்பை கிண்டி விட்டு, பரபரப்பிலேயே அனைவரையும் வைத்து வருகிறார்!

English summary
First Step in the Biden Transition to the White House, and Launch a Twitter Account, Website
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X