வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலவில் கால் பதிக்கவுள்ள முதல் பெண்ணும் எங்கள் நாட்டுக்காரர்தான்.. சொல்கிறார் அமெரிக்க துணை அதிபர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், ஒரு அமெரிக்கராகத்தான் இருப்பார் என அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கு முதன்முதலாக மனிதனை அனுப்பியது அமெரிக்கா. இந்த பெருமைக்குரியவர் அந்நாட்டின் நீல் ஆம்ஸ்ட்ராங். நீல் ஆம்ஸ்ட்ராங்கதான் நிலவில் கால் பதித்த முதல் நபர் என்று கூறப்பட்டாலும் இதில் பல சர்ச்சைகளும் நீடித்து வருகிறது.

First woman to land in Moon will be an American: US

அமெரிக்கா நிலவுக்கு யாரையும் அனுப்பவில்லை. அப்படி வெளியான போட்டோக்கள் எல்லாமே மார்பிங், செட்டப் என இன்று வரையும் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் வாஷிங்டனில் சாட்டிலைட் 2019 என்ற கருத்தரங்கு தொடங்கியுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட 105 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

ஜூலியன் அசாஞ்சே ஒரு அப்பாவி.. ரொம்ப நல்லவர்.. சிறையில் சந்தித்த பின் பமீலா ஆண்டர்சன் பேட்டி ஜூலியன் அசாஞ்சே ஒரு அப்பாவி.. ரொம்ப நல்லவர்.. சிறையில் சந்தித்த பின் பமீலா ஆண்டர்சன் பேட்டி

இதில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "ஜனாதிபதி டிரம்பின் வழிகாட்டுதலின்பேரில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் நிச்சயமாக அமெரிக்க நாட்டினராகத்தான் இருப்பார்" என்று மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
Vice President of US Mike pence has said that the first woman to land in Moon will be a American. Mike Pence said this in satellite 2019 meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X