வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பண்றதெல்லாம் நீங்க பண்ணுவீங்க.. பழி எங்க மேலையா.. இந்தியாவுக்கு ட்ரம்ப் கேள்வி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தங்களது தொழிற்துறை கழிவுகளை, கடலில் கொட்டுகின்றன. அவை லாஸ் ஏஞ்சல்ஸ் கடலில் மிதக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவுக்கு அமெரிக்காதான் பணம் கொடுக்கிறது என்றும் கூறியுள்ளார். நியூயார்க்கின் பொருளாதார கிளப்பில் ட்ரம்ப் பங்கேற்று பேசியபோது, இதுபற்றி கூறியதை பாருங்கள்:

நமக்கு சுத்தமான காற்றும், நீரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், மாசு அதிகமான வருஷமாக இது மாறிவிட்டது.

இஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீதுஇஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீது

பாரீஸ்

பாரீஸ்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஒரு "பேரழிவு" ஆகும். மேலும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு "டிரில்லியன் மற்றும் டிரில்லியன் டாலர்கள்" இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், இது அமெரிக்காவைத்தான் கட்டுப்படுத்துகிறது.

சீனா, ரஷ்யா தப்பும்

சீனா, ரஷ்யா தப்பும்

இது மிகவும் நியாயமற்றது. பாரீஸ் ஒப்பந்தம் 2030ம் ஆண்டு வரை சீனாவுக்கு பொருந்தாதாம். ரஷ்யா 1990களை அடிப்படை ஆண்டாக எடுத்துள்ளது. அப்போது உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான மாசுபாடு இருந்தது. எனவே அதை அடிப்படை ஆண்டாக கணக்கு காட்டி, இப்போது மாசு குறைவாக இருப்பதாக சொல்லி ரஷ்யா தப்பிக்கிறது.

பணம் கொடுக்கிறோம்

பணம் கொடுக்கிறோம்

இந்தியாவை பொறுத்தளவில், நாம்தான் அவர்களுக்கு பணம் கொடுத்து மாசுவை கட்டுப்படுத்த சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். ஏனெனில் அவர்கள் ஒரு வளரும் நாடு. நான் இதனால்தான் ஒருமுறை, சொன்னேன், நாங்களும் ஒரு வளரும் நாடுதான் என்று. இவ்வாறு டிரம்ப் கூறியதும், பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

அமெரிக்கா மீது பழி

அமெரிக்கா மீது பழி

சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் குப்பைகளை சுத்தம் செய்வதற்கு பதிலாக மரங்களைத்தான் வெட்டி வருகின்றன. தங்கள் குப்பைகளை இறுதியில் கடலில் கொட்டுகிறார்கள். அவை லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பகுதியில் மிதக்கின்றது. ஆனால், ஏதோ அமெரிக்கா மாசு ஏற்படுத்திவிட்டது என கடைசியில் நம்மிடமே சொல்வார்கள். இவ்வாறு ட்ரம்ப் பேசியுள்ளார்.

English summary
US President Donald Trump has said countries like China, India and Russia are doing "absolutely nothing" to clean up their smokestacks and industrial plants and the garbage that they drop in sea floats into Los Angeles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X