வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜார்ஜியா மறு எண்ணிக்கையிலும் வென்றார் ஜோ பிடன்.. 30 வருட வரலாறு மாறியது.. மூக்குடைபட்ட டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா, மாகாணத்தில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. அங்கு ஜோ பிடன் வெற்றி பெற்றது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. அன்று முதல் 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

 Georgia recount complete, affirms Joe Biden win: officials

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது ஜார்ஜியா. இங்கு, 16 தேர்தல் ஓட்டுக்கள் உள்ளன. சுமார் 30 வருடங்களாகவே, குடியரசு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க கூடிய மாகாணம் இது. ஆனால், இந்த முறை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தினார். எனவே, மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஜோ பிடன் வென்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆடிட் செய்து பார்த்ததில் வாக்கு எண்ணிக்கை பொருந்திப்போவதை உறுதி செய்துள்ளோம் என்று, ஜார்ஜியா மாகாண செயலாளர் பிராட் ரப்பென்ஸ்பெர்கர் உறுதி செய்துள்ளார்.

ஜோ பிடனுக்கு போன் செய்த பிரதமர் மோடி.. அமெரிக்க - இந்திய உறவு குறித்து பேச்சு.. செம திருப்பம்! ஜோ பிடனுக்கு போன் செய்த பிரதமர் மோடி.. அமெரிக்க - இந்திய உறவு குறித்து பேச்சு.. செம திருப்பம்!

ஜார்ஜியாவை வென்று வரலாற்றை மாற்றிவிட்டார் ஜோ பிடன் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இதுவரை அதிபர் தேர்தலில், ஜோ பிடன் 306 வாக்குகளை பெற்றனர். டொனால்ட் ட்ரம்ப் 232 வாக்குகளை பெற்றனர்.

English summary
The Associated Press news agency said late Thursday that Biden had secured Georgia’s 16 Electoral College votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X