வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்தது.. 2வது இடத்தை பிடித்த பிரேசில்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில், இதுவரை 5,303,715 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 339,992ஆக உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 2,158,514 என்ற அளவில் உள்ளது. அமெரிக்கா 1,645,094, பிரேசில் 332,382, ரஷ்யா 326,448, ஸ்பெயின் 281,904, பிரிட்டன் 254,195, இத்தாலி 228,658, பிரான்ஸ் 182,219, ஜெர்மனி 179,713, துருக்கி 154,500, ஈரான் 131,652, இந்தியா 124,794, பெரு 111,698, சீனா 82,971, கனடா 82,480, சவுதி அரேபியா 67,719 என்ற வகையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை உள்ளது.

தடுப்பூசி தேவையில்லை.. இந்தியாவால் கொரோனாவை ஒழிக்க முடியும்.. WHO தலைமை விஞ்ஞானி சொல்வதை பாருங்கதடுப்பூசி தேவையில்லை.. இந்தியாவால் கொரோனாவை ஒழிக்க முடியும்.. WHO தலைமை விஞ்ஞானி சொல்வதை பாருங்க

Globally, 5,303,715 people have been infected by coronavirus

மொத்த பாதிப்புகள் எண்ணிக்கையில், தென் அமெரிக்க நாடான, பிரேசில், தற்போது 2வது இடத்தை பிடித்துள்ளது. அது ரஷ்யாவை முந்திச் சென்று அந்த இடத்தை பிடித்துள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியா தனது மக்கள் தொகையில் ஒரு மில்லியனுக்கு மிகக் குறைந்த சோதனைகளை நடத்தியுள்ள நாடு என்ற இடத்தை பிடித்துள்து. ஒரு மில்லியன் மக்களுக்கு 1,973 என்ற அளவில், சோதனைகளை, இந்தியா நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் பிரேசில் நடத்திய அளவைவிட பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus world update: Globally, 5,303,715 people have been infected by coronavirus so far, and the total number of deaths from the disease now stands at 339,992.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X