வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது சரியில்லை.. அமெரிக்கா-ரஷ்யா இடையே பேராபத்து காத்திருக்கிறது.. கோர்பச்சேவ் பகிரங்க எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அணு ஆயுதங்கள் இருக்கும் வரை, ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பேராபத்து காத்துக் கொண்டு இருக்கிறது என்று
சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் எச்சரித்தார்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா நடுவே உருவாக்கப்பட்ட, இடைநிலை-வீச்சு அணுசக்தி ஒப்பந்தம் (ஐ.என்.எஃப்) ரத்து செய்யப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா அறிவித்தது.

ரஷ்யா, இந்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாகவும், எனவே தாங்கள் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்தது, அமெரிக்கா. ஆனால், ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்தது.

நகைக்கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் உள்ள பெரும் ஆபத்து.. சட்ட நிபுணர்நகைக்கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் உள்ள பெரும் ஆபத்து.. சட்ட நிபுணர்

அணு ஆயுத கட்டுப்பாடு

அணு ஆயுத கட்டுப்பாடு

இந்த நிலையில், START ஒப்பந்தம் மட்டுமே அணு ஆயுத பயன்பாட்டை இவ்விரு நாடுகள் நடுவே கட்டுப்படுத்தும் எஞ்சிய ஒரே ஒப்பந்தமாக உள்ளது. இதையும் அமெரிக்கா ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. உலகின் 2 பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான கடைசி பெரிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இதுதான் என்பதால், இரு நாடுகள் நடுவேயான பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

பூமியை காப்பாற்ற வேண்டும்

பூமியை காப்பாற்ற வேண்டும்

இந்த நிலையில்தான், மிகைல் கோர்பச்சேவ் அளித்த பேட்டியில் கூறியதை பாருங்கள்: அணு ஆயுதங்கள் அழிக்கப்படும், என்று அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டும். இதுதான் நம்மையும் நமது பூமியையும், காப்பாற்றும்.

அணு ஆயுத கட்டுப்பாடு

அணு ஆயுத கட்டுப்பாடு

பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பதற்காக, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து ஒப்பந்தங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

"வெவ்வேறு இடங்களில், மோதல் போக்குகள் உள்ளன, விமானம் மற்றும் கப்பல்கள் அங்கேயும், இங்கேயும் அனுப்பப்படுகின்றன. இது நாம் விரும்பும் நிலவரம் இல்லை." என்றும் அவர் தெரிவித்தார். மிகைல் கோர்பச்சேவ் அணு ஆயுதங்களுக்கு எதிராக நீண்டகாலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

English summary
Mikhail Gorbachev, on Sunday warned of a colossal danger between Russia and the U.S. as long as weapons of mass destruction exist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X