வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'கவுண்டர்' பெயரை நீக்க முடியாது- ஜோ பிடனின் கொரோனா தடுப்பு குழு உறுப்பினரான தமிழகத்தின் செலின்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் கொரோனா தடுப்பு குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பெற்றுள்ளார். தமது பெயருக்கு பின்னால் உள்ள கவுண்டர் என்பது என் அடையாளம் அதை நீக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செலின் கவுண்டர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்க உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி.. 6 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஆர்ச்சர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி.. 6 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஆர்ச்சர்

மருத்துவ குழுவில் செலின்

மருத்துவ குழுவில் செலின்

இந்த நிலையில் ஜோ பிடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான குழு அறிவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மருத்துவரான டாக்டர் விவேக் மூர்த்தி தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பிடித்திருக்கிறார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர் செலின் கவுண்டர். தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் செலின் கவுண்டர் இடம்பெற்ற தகவலை மொடக்குறிச்சி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

குவிந்த வாழ்த்துகள்

குவிந்த வாழ்த்துகள்

செலின் கவுண்டருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் டாக்டர் செலினுக்கு வாழ்த்துகளைக் கூறியிருந்தனர். இதனிடையே ட்விட்டர் தளத்தில் டாக்டர் செலினுக்கு பின்னால் இருக்கும் கவுண்டர் பெயர் குறித்து சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனை நீக்கலாமே என சிலர் வலியுறுத்தினர்.

 கவுண்டர் பெயரால் சர்ச்சை

கவுண்டர் பெயரால் சர்ச்சை

இதற்கு ட்விட்டரில் செலின் கவுண்டர் அளித்த பதில்: என்னுடைய பெயரின் பின்னால் கவுண்டர் பெயர் போட்டிருக்கிறீர்கள்? என பலரும் கேட்கிறார்கள். என்னுடைய தந்தை 1960களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். அவரது நடராஜன் என்ற பெயரை உச்சரிக்க அமெரிக்கர்கள் தடுமாறினர். அவர்களுக்கு கவுண்டர் என உச்சரிப்பது எளிதாக இருந்தது. 1970களில் நான் பிறப்பதற்கு முன்னதாகவே என்னுடைய தந்தை கவுண்டர் என பெயரை மாற்றிக் கொண்டார்.

என் வரலாறு..

என் வரலாறு..

என்னுடைய பெயர் என்னுடைய பெயர்தான். அது என்னுடைய வரலாறு. என்னுடைய அடையாளத்தின் ஒருபகுதி. நான் திருமணமான பின்னரும் கூட என்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. இப்போதும் என்னுடைய பெயரை நான் மாற்றவும் மாட்டேன். இவ்வாறு செலின் கவுண்டர் கூறியிருக்கிறார். அவரது பதிவில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

English summary
Dr Céline Gounder tweets that "My father changed his name to Gounder in the early 1970s before I was born. My name is my name. It's part of my history and identity, even if some of that history is painful. I didn't change my name when I got married. I'm not changing it now".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X