வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலை இல்லா பிரச்சினையோடு,மருத்துவ காப்பீட்டுக்கு முழு தொகை செலுத்தனும்.. எச்-1பி விசாதாரர்கள் அவஸ்தை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச் -1 பி விசாக்கள் இன்றி வேலை இழந்த ஊழியர்கள், தமக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீட்டிற்காக அதிக தொகையை செலுத்த வேண்டியிருக்கும். ஆனாலும், இதே திட்டத்தில் தொடருவது நல்லது என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அமெரிக்காவில், H-1B விசா பெற்ற பல ஊழியர்கள், வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனாதான், இதற்கு காரணம்.

H-1B visa holders lost their jobs in United States will have to pay more for medical insurance

ஆனால், The Consolidated Omnibus Budget Reconciliation Act of 1985 சட்டம், (கோப்ரா) தொழிலாளர்கள், பணியிலிருந்து நீக்கப்பட்டாலும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் தொடரும் உரிமையை வழங்குகிறது.

நியூயார்க்கை சேர்ந்த சட்ட நிறுவனமான சைரஸ் டி மேத்தா & பார்ட்னர்ஸின் நிர்வாக வழக்கறிஞர் சைரஸ் டி மேத்தா இதுபற்றி கூறுகையில், உரிமையாளர் சுகாதார காப்பீட்டை வழங்கினால், பணிநீக்கம் காரணமாக காப்பீட்டு நன்மைகளை இழக்கும் நபர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கான வாய்ப்பை நிறுவனம் வழங்கியாக வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

"நிறுவன மருத்துவ காப்பீடு திட்டங்கள் பொதுவாக உயர்ந்த தரம் வாய்ந்தவை, மேலும், இந்த காப்பீட்டு திட்டங்களை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தள்ளுபடி கட்டணத்தில், நிறுவனங்கள் வாங்க முடியும். பெரும்பாலான தொகையை, நிறுவனமும், குறைந்த தொகை அல்லது சரி சமமான தொகையை ஊழியரும் செலுத்துவார்கள். ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, மருத்துவ காப்பீட்டு தொகை முழுதையும், ஊழியரே செலுத்த வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர், வழக்கறிஞர் அஸ்வின் ஷர்மா கூறுகையில், எச் -1 பி ஊழியர்கள் சராசரியாக ஆண்டுக்கு 70,000 முதல் 120,000 டாலர் வரை சம்பாதிக்கிறார்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு உடனடியாக, கோப்ரா சட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது, அதில் 100% பிரீமியத்தை பணியாளர்தான் செலுத்தியாக வேண்டும், மேலும் 18 மாதங்கள் வரை இந்த சலுகையை பெறலாம்.

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலுராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு

ஒரு ஊழியருக்கான காப்பீடு அவர்கள் 20 வயதில் இருந்தால் மாதத்திற்கு சுமார் 200- 300 டாலர் வரை செலவாகும், மற்றும் 30களில் 350- 450 டாலர், அவர்கள் 40 அல்லது 50களில் இருந்தால், ஒருவேளை அது 500- 600 டாலர் என்ற அளவுக்கு இருக்கும். இது அதிகமான செலவீனம்தான் என்றார் அஸ்வின் ஷர்மா.

இருப்பினும், வேலையில்லாமல் இருப்பவருக்கு, புதிதாக காப்பீடு கிடைப்பது கஷ்டம் என்பதால், இந்த காப்பீடு வசதியை தொடர்ந்து கொள்வது நல்லது என்கிறார்கள், இந்த நிபுணர்கள்.

English summary
Employees who have lost their jobs without H-1B visas in the United States will have to pay more for medical insurance for themselves and their families. However, economists advise that it is better to continue with the same plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X