வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

60 நாள்தான் கெடு.. அதிர்ச்சியில் அமெரிக்க எச்1 பி விசா ஊழியர்கள்.. 3 லட்சம் பேர் இந்தியா ரிட்டர்ன்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஒன்றல்ல, இரண்டல்ல, 3 லட்சம். எச் 1 பி விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை இது. இவர்கள் அத்தனை பேரும் இப்போது வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு யுகம் போல கழிகிறது.

Recommended Video

    கொரோனாவுடன் கைகோர்க்க இருக்கும் புயல்... அச்சத்தில் அமெரிக்கா

    எச் 1 பி விசா என்பது பணிபுரியும் வெளிநாட்டினருக்கானது. இந்த விசா விதிமுறைப்படி, அமெரிக்காவில் பணியாற்றும் ஒரு வெளிநாட்டுக்காரர் பணியிழந்தால், 60 நாட்களுக்குள் நாட்டை காலி செய்ய வேண்டும். அப்படியில்லாவிட்டால் 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

    இங்குதான் இப்போது சிக்கல். கொரோனாவால், தொழில்கள் முடங்கியுள்ளதால், அமெரிக்காவில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின், சொந்த நிறுவனங்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. ம், என்றால் பணி நீக்கம், உம் என்றால் வெளியேற்றம்.. என்ற நிலையில்தான் அமெரிக்கா இருக்கிறது.

    காப்பீடு

    காப்பீடு

    அமெரிக்க தொழிலாளர் மற்றும் புள்ளிவிவரத் இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்திலிருந்து, அமெரிக்காவில் வேலையின்மை 3000% ஐ எட்டியுள்ளன, 66 லட்சத்துக்கும் அதிக மக்கள் வேலையின்மை காலத்துக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் இன்னொரு கொடுமை, ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டவுடன், அவர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த சுகாதார காப்பீட்டின் பலனை பெற முடியாது. மருத்துவமனைகளில் சொந்த செலவில்தான் சிகிச்சை பெறனும்.

    இந்தியர்கள்

    இந்தியர்கள்

    அமெரிக்கர்களுக்கே இந்த கதி என்றால், எச் 1 பி விசா வைத்துள்ள வெளிநாட்டினர் கதி? பணிநீக்கம் செய்யப்பட்டாலும் வேறு வேலை கிடைக்க கூடிய நிலைமையா அமெரிக்காவில் இருக்கிறது? அதுவும் 60 நாட்களுக்குள் வேலை என்பதெல்லாம், இப்போதைய அமெரிக்க சூழலில் நினைத்து பார்க்க முடியாத விஷயம். எனவே என்னதான் திறமையான பணியாளர்களாக இருந்தாலும், விமானத்தில் ஏறி சொந்த நாடுகளுக்குத்தான் போகனும்.

    ரெடியாகிவிட்டோம்

    ரெடியாகிவிட்டோம்

    "தற்போது எச் 1 பி விசாக்களில் பணிபுரியும் அனைவரும் மனதளவில் தயாராகி வருகிறோம், நாங்கள் எங்கள் வேலைகளை இழக்க நேரிடும், மேலும் 60 நாட்களுக்குள் எங்களுக்கு வேறொரு வேலை கிடைப்பதும் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது என்பதால் இந்தியாவுக்கு திரும்பி வர வேண்டியிருக்கும்" என்று ஒரு கூறினார் இந்திய ஐடி பொறியாளர். இதில் மற்றொரு சிக்கல் என்னவென்றால், இப்போது நாடுகளிடையே விமானப் போக்குவரத்து கிடையாது. விசா காலாவதியானால், சிறைக்குத்தான் போக வேண்டும் அல்லது முகாமுக்கு போக வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை.

    கையெழுத்து இயக்கம்

    கையெழுத்து இயக்கம்

    எனவேதான், வெள்ளை மாளிகை இணையதளத்தில், எச் 1 பி விசா ஒரு புது கோரிக்கையுடன் குவியத் தொடங்கிவிட்டனர். இந்த 60 நாள் சலுகை காலத்தை 180 நாட்களுக்கு நீட்டிக்குமாறு அமெரிக்க அரசிடம் கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன. சொந்த நாடுகளுக்கு விமானத்தில் செல்ல முடியாது என்பதால், அமெரிக்க அரசு சலுகை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்காக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், தற்போது வரை சுமார் 53,000 கையொப்பங்கள் இடப்பட்டுள்ளன. 1 லட்சம் கையொப்பங்களை அடைந்தால்தான், அரசு இதை கவனிக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஐடி ஊழியர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

    ஊதியமில்லாத விடுமுறை

    ஊதியமில்லாத விடுமுறை

    எச் 1 பி விசா வைத்திருப்பவர்களைத் தவிர, மாணவர் விசாவில் இருப்பவர்களும் தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அதேநேரம், மேலும் சில யோசனைகள் முன்வைக்கப்படுகிறது. எச் 1 பி விசாவை இழக்காமல் இருக்க வேண்டும், தங்கள் நிறுவனத்திற்கும் நிதி சுமை ஏற்பட கூடாது என்றால், ஊதியம் தராமல், விடுமுறை என்று அறிவிக்கலாம். இதனால் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இரு தரப்புக்குமே, பலன் கிடைக்கும் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.

    அடுத்த ஆப்ஷன்

    அடுத்த ஆப்ஷன்

    ஒருவேளை, இப்படி, நடக்காவிட்டால், பி1 அல்லது பி 2 விசாக்களாக எச் 1 பி விசாக்களை மாற்றிக்கொள்ளலாம். அதாவது சுற்றுலா பயணிகள் அல்லது வியாபார விஷயமாக வந்திருப்பதாக கூறலாம். ஆன்லைன் மூலமாகவே, இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்று கூறுகிறார்கள், இந்த துறை சார்ந்த நிபுணர்கள்.

    English summary
    Employees who are on H1-B visas in the USA would have only 60 days to find another job opportunity or leave the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X