வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாதிப் பேர் அணிவதே இல்லை.. மீதிப் பேர் துவைப்பதே இல்லை.. கருமம்.. அமெரிக்காவில் இப்படித்தானாம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாதி பேர் தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை தினமும் மாற்றும் பழக்கம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் ஒரு சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

கூழானாலும் குளித்து குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்று நாம் அடிக்கடி கூறுவதுண்டு. இதன் அர்த்தம் நாம் உண்ணும் உணவு கூழாக இருந்தாலும் சரி, அதை குளித்துவிட்டு குடிக்க வேண்டும் என்பதாகும்.

அது போல் கந்தல் துணியை அணிந்தாலும் அதை தினந்தோறும் துவைத்து உடுத்து என்பதுதான் கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பதன் அர்த்தம். இது அந்த காலத்திலேயே நோய் கிருமிகள் அண்டுவதை தவிர்க்க இது போல் அறிவுறுத்தப்பட்டது.

உள்ளாடை

உள்ளாடை

ஆனால் அமெரிக்காவில் ஒரு சர்வேயில் வெளியான முடிவுகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. டாமி ஜான் என்ற உள்ளாடை தயாரிக்கும் நிறுவனம் ஒரு ஆய்வை நிகழ்த்தியுள்ளது. அதில் அமெரிக்கர்களில் 45 சதவீதம் பேர் தினம்தோறும் தங்கள் உள்ளாடைகளை மாற்றுவதில்லையாம்.

உள்ளாடை

உள்ளாடை

அதில் 13 சதவீதம் பேர் வாரத்துக்கு ஒரு முறை தங்கள் உள்ளாடையை மாற்றுகிறார்களாம். இதில் ஆண்கள், பெண்கள் எல்லாம் அடக்கம்தான். அதிலும் ஆண்கள் மிகவும் மோசமாம். 1000 அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் பெண்களை காட்டிலும் 2.5 மடங்கு 7 நாட்களுக்கோ அல்லது அதற்கும் மேலோ ஒரே உள்ளாடைகளை அணிகிறார்களாம்.

நீண்ட நாட்கள்

நீண்ட நாட்கள்

46 சதவீதம் பேர் ஒரே உள்ளாடையை வருடக்கணக்கில் பயன்படுத்தியுள்ளதாக மார்தட்டி கொள்கின்றனர். ஒரு உள்ளாடை பிடித்து விட்டால் அதையே நீண்ட நாட்களுக்கு 38 சதவீதம் அணிந்திருக்கும் சம்பவமும் நடக்கிறதாம்.

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

இந்த சர்வே முடிவுகளால் டாம்மி ஜான் நிறுவனம் மயங்கி விழாத குறையாக அதிர்ச்சி அடைந்துள்ளது. பழைய உள்ளாடைகளை 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் தூக்கிபோட்டுவிட்டு புதிய உள்ளாடைகளை பயன்படுத்தினால்தான் நோய் தொற்று ஏற்படாது என நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் பரிந்துரைத்து வரும் நிலையில் இந்த சர்வே முடிவுகளால் நிறுவனம் ஆடிபோயுள்ளது.

English summary
A survey has revealed some surprising truths about people's behaviour when it comes to changing their underwear. Nearly half of the people dont change underwear daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X