வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அணு ஆயுத புட்பாலோடு வெளியேறிய டிரம்ப்.. பிடனிடம் கொடுக்கப்படும் புது "நியூக்ளியர் கோட்".. சுவாரசியம்

Google Oneindia Tamil News

வாஷிங்க்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அணு ஆயுத கட்டுப்பாட்டு சூட்கேஸ் புதிய அதிபர் பிடனுக்கு எப்படி மாற்றப்படும் என்பது குறித்த சுவாரசிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். பிடனுடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளார். வாஷிங்க்டன் டிசியில் உள்ள கேப்பிட்டல் கட்டிடம் முன் இந்த பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.

அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே தற்போதைய அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்துவிட்டார். பிடனின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மனமின்றி டிரம்ப் முன்னதாகவே வெள்ளை மாளிகையை காலி செய்துவிட்டார்.

டிரம்ப் விமானம் ஒதுக்காததன் எதிரொலி... பதவியேற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பிடன்..! டிரம்ப் விமானம் ஒதுக்காததன் எதிரொலி... பதவியேற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பிடன்..!

சிக்கல்

சிக்கல்

நிகழ்கால அதிபர் இப்படி வெள்ளை மாளிகையை காலி செய்து வெளியேறுவதும், புதிய அதிபரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதும் அமெரிக்க பாரம்பரியம் கிடையாது. பாரம்பரியம் என்பதையும் தாண்டி இதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதிபர் பதவியின் கடைசி நாளில் கூட டிரம்ப் நிறைய பாரம்பரியங்களை உடைத்து, தன் மனம் போன போக்கில் முடிவுகளை எடுத்துள்ளார்.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

டிரம்ப் இப்படி அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் முன்கூட்டியே வெளியேறுவதால் "அணு ஆயுத கட்டுப்பாட்டு சூட்கேஸை" கை மாற்றுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அணு ஆயுத தாக்குதலை நடத்த அதிபர்தான் உத்தரவிட முடியும். அதாவது ஒரு நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் அமெரிக்க அதிபர் உத்தரவிட முடியும். இதற்காக அதிபருடன் இருக்கும் இரண்டு விஷயங்கள்தான் "புட்பால்" மற்றும் "பிஸ்கட்".

அது என்ன புட்பால்

அது என்ன புட்பால்

அணு ஆயுத புட்பால் என்பது அமெரிக்க அதிபரிடம் இருக்கும் ஒரு கருப்பு நிற பெரிய சூட்கேஸ் ஆகும். இதை அதிபருடன் எப்போதும் இருக்கும் ஒரு ராணுவ உயர் அதிபர் வைத்து இருப்பார். 20 கிலோ எடை கொண்ட இந்த சூட்கேஸ் மூலம் அணு ஆயுத தாக்குதலை எங்கிருந்து வேண்டுமானாலும் நடத்த முடியும். ஆனால் இதில் தாக்குதலை நடத்துவதற்கான சிவப்பு நிற பொத்தான் எல்லாம் இருக்காது. இந்த புட்பால் செயல்படும் விதம் கொஞ்சம் விசித்திரமானது.

எப்படி செயல்படும்

எப்படி செயல்படும்

ஒரு நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த விரும்பினால் இந்த புட்பாலை திறந்து அமெரிக்க அதிபர் அணு ஆயுத தாக்குதல் நடத்த உத்தரவிடலாம். இந்த உத்தரவு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். ராணுவ கட்டுப்பாட்டு அறையில் இந்த உத்தரவை சோதனை செய்துவிட்டு அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும். இந்த உத்தரவு புட்பாலில் இருந்து ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு எப்படி செல்லும் என்பது மட்டும் ராணுவ ரகசியம். அதேபோல் இந்த உத்தரவு எப்படி கொடுக்கப்படும் என்பது குறித்தும் நிறைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளது.

சுவாரசியம்

சுவாரசியம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த புட்பால் மூலம் அதிபர் அணு ஆயுத தாக்குதலை உத்தரவிட வேண்டும் என்றால் அதற்கு அவர் ஒரு பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டும். இந்த பாஸ்வேர்ட் அதிபர் டிரம்பிடம் தற்போது உள்ளது. கிரெடிட் கார்ட் போன்ற கண்ணாடி அட்டையில் இந்த பாஸ்வேர்ட் இருக்கும். இந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் அதிபர் உத்தரவை உறுதி செய்து ராணுவ கட்டுப்பாட்டு மையம் அணு ஆயுத தாக்குதலை நடத்தும்.

புட்பால் பிஸ்கட்

புட்பால் பிஸ்கட்

இந்த பாஸ்வேர்ட் அடங்கிய அட்டைக்கு பெயர்தான் பிஸ்கட். இந்த பிஸ்கட்டும் - புட்பாலும்தான் அமெரிக்க பாதுகாப்பை உறுதி செய்யும். ஒரு அதிபர் விபத்தில் இறந்துவிடுகிறார் என்றால் உடனே அவரின் பிஸ்கட் பாஸ்வேர்ட் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டு துணை அதிபரின் பாஸ்வேர்ட் ஆக்டிவேட் செய்யப்படும். இருவரும் ஒன்றாக விபத்தில் இறந்தால் காங்கிரஸ் அவையின் ஸ்பீக்கரின் பாஸ்வேர்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.

மூன்று பேர்

மூன்று பேர்

ஆனால் இவர்கள் மூவரும் இறந்து போனாலும் கூட அமெரிக்காவில் இருக்கும் "டேசிக்னேடட் சர்வைவர்" எனப்படும் அதிபர் பொறுப்பை ஏற்க தகுதியான அடுத்த கட்ட உயர் அதிகாரியிடம் (பெரும்பாலும் மூத்த அமைச்சர்கள்) இந்த பிஸ்கட் மற்றும் புட்பால் கொடுக்கப்படும். ஆகவே ஒரே நேரத்தில் 3-4 புட்பால் எப்போதும் தயாராக இருக்கும்.

வழக்கம்

வழக்கம்

பொதுவாக ஒரு அதிபரின் ஆட்சி முடிந்து புதிய அதிபர் பதவி ஏற்கும் போது பழைய அதிபர் கண் முன்னே புதிய அதிபரிடம் இந்த புட்பால் கொடுக்கப்படும். அதேபோல் புதிய அதிபரிடம் பிஸ்கட் கொடுக்கப்பட்டு அதில் புதிய பாஸ்வேர்ட் கொடுக்கப்படும். பதவி ஏற்பு விழாவின் ஒரு பகுதியாக இது நடக்கும். ஆனால் டிரம்ப் தற்போது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

இதனால் பதவி ஏற்பு விழாவின் போது புட்பாலை டிரம்ப் பிடனுக்கு கொடுக்க மாட்டார். மாறாக பிடனிடம் வேறு ஒரு புட்பால் சூட்கேஸ் கொடுக்கப்படும். அதேபோல் இவரிடம் வேறு பாஸ்வேர்ட் அடங்கிய பிஸ்கட் கொடுக்கப்படும். பிடன் பதவி ஏற்றதும் மதியம் 12.01 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) புதிய பாஸ்வேர்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.

டிரம்ப்

டிரம்ப்

டிரம்ப் இந்த நேரத்தில் எங்கு இருந்தாலும் அவரிடம் பாஸ்வேர்ட் தானாக டீ ஆக்டிவேட் செய்யப்படும். மதியம் 11.59 மணிக்கு இந்த பாஸ்வேர்ட் டீ ஆக்டிவேட் ஆகும். அதன்பின் டிரம்ப் அருகே இருக்கும் அந்த உயர் அதிகாரி டிரம்பின் புட்பாலை எடுத்துக்கொண்டு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு திரும்பிவிடுவார். அமெரிக்க அணு ஆயுத கட்டுப்பாட்டு சக்தி இன்று இப்படித்தான் ஒரு அதிபரிடம் இருந்து இன்னொருவருக்கு மாற்றப்படும்.

சுவாரசியம்

சுவாரசியம்

இதற்கு முன் இப்படி நடத்துது இல்லை. அதே சமயம் முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி சுடப்பட்ட போது இந்த பிஸ்கட் பாஸ்வேர்ட் காணாமல் போனது . அதேபோல் பில் கிளிண்டன் தனது பாஸ்வேர்ட் பிஸ்கெட்டை பல மாதங்களாக தொலைத்துவிட்டு தேடியதும் குறிப்பிடத்தக்கது.

English summary
How will New President Joe Biden get the football and biscuit passcode without a Trumps handover?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X