வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாருங்க.. பிடன் வந்ததும் ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சு.. அதிபரின் பதவி ஏற்பு விழாவில் செம சம்பவம்!

Google Oneindia Tamil News

வாஷிங்க்டன்: அமெரிக்க அதிபர் பிடனின் பதவி ஏற்பு விழாவில் அரசியல்வாதிகள் முதல் மக்கள் வரை எல்லோரும் மாஸ்க் அணிந்து இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவில் புதிய அதிபர் பிடன் பதவி ஏற்பதற்கான விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியாசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப்பை வீழ்த்து தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த பதவி ஏற்பு விழா தற்போது நடந்து வருகிறது. அதிபர் டிரம்ப் ஏற்கனவே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிட்டதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்.

அறிவியல்

அறிவியல்

அமெரிக்க அதிபராக இருந்த வரை டிரம்ப் அறிவியலுக்கு புறம்பான பல கருத்துக்களை கூறி வந்தார். முக்கியமாக கொரோனா வந்த பின் வில்லேஜ் விஞ்ஞானி போல பல கருத்துக்களை கூறி வந்தார். சானிடைசர் குடிக்க வேண்டும் என்பது தொடங்கி கொரோனாவை குணப்படுத்த பல விசிரித்திரமான ஐடியாக்களை கூறி டிரம்ப் பரபரப்பை கிளப்பினார்.

மாஸ்க்

மாஸ்க்

முக்கியமாக மாஸ்க் போடுவதற்கு எதிராக டிரம்ப் கருத்து கூறினார். தான் மாஸ்க் போட முடியாது என்று கூறி, மாஸ்க் இல்லாமல் வெளியே சுற்றினார். இவரை பார்த்த பல லட்சம் அமெரிக்கர்களும் மாஸ்க்கை துறந்து வெளியில் சுற்றினார்கள். இதனால் அமெரிக்காவும் கொரோனா பாதிப்பில் முதலிடத்திற்கு சென்றது.

மாஸ்க்கை போற்று

மாஸ்க்கை போற்று

அதன்பின் கொரோனா வந்து பாதிக்கப்பட்ட பின்தான் டிரம்ப் மாஸ்கின் மகிமையை உணர்ந்து "மாஸ்க்கை போற்று" என்று முடிவை மாற்றினார். ஆனால் பிடனோ தொடக்கத்தில் இருந்து மாஸ்க் போடுங்கள், சமூக இடைவெளி விடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். கமலா ஹாரிஸும் மாஸ்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

பதவி ஏற்பு

பதவி ஏற்பு

ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா கட்டுப்பாடுதான் எங்களின் முதல் வேலை, மக்கள் மாஸ்க் போடுவதை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்று பிடன் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் இதை எல்லாம் அமெரிக்க மக்கள் பெரிதாக மதித்தாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது அதிபர் பிடனின் பதவி ஏற்பு விழாவில் எல்லோரும் மாஸ்க் அணிந்துள்ளனர்.

பெரிய மாற்றம்

பெரிய மாற்றம்

ஆச்சர்யமாக ஊழியர்கள், அனைத்து அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என்று பலரும் வண்ண வண்ணமாக மாஸ்க் அணிந்துள்ளனர். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று ஒரே நாளில் அமெரிக்காவே மாஸ்க் விழிப்புணர்வு பெற்றது போல மாஸ்க் அணிந்து மக்கள் விழாவிற்கு வந்துள்ளனர். அதிலும் பதவி ஏற்பு விழாவில் முகம் தெரிய வேண்டும் என்று செண்டிமெண்ட் பார்க்காமல் பிடனும் மாஸ்க் அணிந்துள்ளார்.

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸும் மாஸ்க் அணிந்து எடுத்துக்காட்டாக அமர்ந்து இருக்கிறார். மக்கள் எல்லோரும் மாஸ்க் அணிந்துதான் விழாவிற்கு வர வேண்டும் என்று பிடன் கூறி இருந்தார். அதை மக்கள் பின்பற்றி உள்ளனர். மாற்றம் என்பது சின்ன சின்ன விஷயங்களில் இருந்து தொடங்க வேண்டும். அமெரிக்காவிற்கான மாற்றம் மாஸ்க்கில் இருந்து தொடங்கி இருக்கிறது.

ரூல்ஸ் ரூல்ஸ்தான்

ரூல்ஸ் ரூல்ஸ்தான்

பிடனின் அணுகுமுறை வேறாக இருக்கும் என்பது ஸ்டிரிக்ட் மாஸ்க் ரூல்ஸில் இருந்தே தெரிய வருகிறது. நான் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா பழைய படி மாறும் என்று பிடன் கூறினார். மீண்டும் சூப்பர் பவராக, கட்டுப்பாடு மிக்க, ஒழுக்கமான நாடாக அமெரிக்கா மாறும் என்று பிடன் கூறி இருந்தார். அதை தற்போது மாஸ்க்கில் இருந்து பிடன் தொடங்கி உள்ளார்.

English summary
Huge Change, Everyone including President Biden seen in a mask during inauguration ceremony today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X