வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழர் பண்பாட்டின் பெருமிதம்.. இருகரம் கூப்பி வணக்கம் சொல்லுதலே எளிதானது... பின்பற்றுகிறேன்: டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவைப் போல இருகரம் கூப்பி வணக்கம் சொல்லுதல்தான் தமக்கு எளிதானது; இந்திய பயணத்துக்குப் பின்னர் தாம் இதையே பின்பற்றுகிறேன் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Recommended Video

    Corona Virus : பரவும் கொரோனா..அச்சத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள்..

    இந்தியப் பெருநிலம் முழுவதும் தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பு. 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தியா என்கிற தேசம் கட்டமைக்கப்பட்டது. இப்பெருநிலப்பரப்பில் காஷ்மீர் ஏன் ஆப்கானிஸ்தானம் முதல் இலங்கை வரையில் தமிழர் பண்பாட்டின் எச்சங்களும் மிச்சங்களும் விரவிக் கிடக்கின்றன.

    I didnt shake any hands now, says US President Donald Trump

    இனக்கலப்புகளால் மொழி சிதைவுண்டு புதிய மொழிகள் தோன்றியிருக்கலாம். வந்தேறிகளின் படையெடுப்புகளால் பண்பாடுகள் உருமாறி இருக்கலாம். ஆனாலும் ஆதிமனிதர்களான தமிழர்களின் நாகரிகம் என்பதால் அது உருக்குலையாமல் கால்பதிந்து வாழ்ந்த தேசமெல்லாம் அதன் சுவடுகள் விரவிக் கிடக்கின்றன.

    இந்த பெருமிதத்துக்குரிய தமிழர் பண்பாட்டில் முதன்மையானது இருகரம் கூப்பி வணக்கம் என மரியாதையுடன் அழைப்பது. சக மனித உறவுகளை தமக்கு சமமானதாக மதிக்கும் மாண்பை ஆதி மனித சமூகமான தமி்ழ் சமூகம் உலகுக்கு உணர்த்திருக்கிறது. இந்த பெருமிதப் பண்பாட்டைதான் தற்போது தாமும் பின்பற்று வதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    தம்மை சந்தித்த அயர்லாந்து பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோவிடம் இதனை பெருமையாக டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். லியோவுடனான சந்திப்பின் போது, தாம் இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் யாரிடமும் கை குலுக்குவது இல்லை; வணக்கம்தான் செலுத்துகிறேன். இதுவே எளிதாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்.

    தற்போது உலகையே தாக்கி சிதைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் தமிழரின் வணக்கம் பண்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று உலக நாடுகள் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    US President Donald Trump said that We didn't shake hands today and we looked at each other and said what're we going to do? Sort of a weird feeling. We did this . I just got back from India and I didn't shake any hands there. It was easy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X