வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. என்னைப் பார்க்க எவ்ளோ கூட்டம்.. மறக்க முடியாத இந்தியா.. டிரம்ப் நெகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அப்படி ஒரு கூட்டத்தையும் உற்சாகத்தையும் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்று இந்திய கூட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

இந்தியாவின் அஹமதாபாத்தில் 100000 மக்கள் மத்தியில் தான் பேசியதை வைத்துதான் அமெரிக்காவின் தென் கரோலினாவில் டிரம்ப் இப்படி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 36 மணி நேர சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்திய அரசு இதுவரை எந்த நாட்டு அதிபருக்கு அளிக்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தது. அதாவது நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியை நடத்தியும், ஊர்வலம் செல்ல வைத்தும் பல லட்சம் இந்தியர்களின் மத்தியில் பிரதமர் மோடி அரசு டிரம்பை உரையாற்ற வைத்தது. நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் தன்னை பார்க்க கூடிய கூட்டத்தை பார்த்த ஆனந்த கண்ணீர் வடித்து வருகிறார் டிரம்ப்,

 பிரதமர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை.. ஆர்டிஐ தகவல் பிரதமர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை.. ஆர்டிஐ தகவல்

இந்திய பயணம்

இந்திய பயணம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அஹமதாபாத்தின் மோடரோ மைதானத்தில் 'நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பல்லாயிரம் இந்தியர்கள் மத்தியில் பேசியது குறித்து தனது கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசினார்,

நன்றி கடன்

நன்றி கடன்

அப்போது அவர் பேசுகையில், "இதை உங்களிடம் சொல்வதை நான் வெறுக்கிறேன், ஏனெனில் இந்தியாவில் அவர்கள் உண்மையில் 129,000 பேர் என்னை பார்க்க வந்திருந்தார்கள் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம். அதை நீங்கள் அதைப் பார்த்தீர்களா? அந்த இடம் முழுவதும் நிரம்பியிருந்தது, இதன் மூலம் ஒரு லட்சம் மக்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.

இங்கு வராது

இங்கு வராது

அந்த நிகழ்வில் மோடி "ஒரு சிறந்த மனிதர்" மற்றும் "இந்திய மக்களால் நேசிக்கப்படுபவர்" என்று மேடையில் நான் பகிர்ந்து கொண்டேன்., அங்கு கூடிய கூட்டத்தைபார்த்து எங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அங்கு போய் வந்த பிறகு இங்கே கூட்டத்தை பார்த்தேன் பொதுவாக நான் பேசும் கூட்டத்தை பற்றி சொன்னால் அங்கு ஒப்பிடும் எனக்கு பெரிய கூட்டம் வருவதில்லை. ஒரு 140 அல்லது 50 அல்லது 60,000 பேர் தான் அதிக பட்ச கூட்டமாக இருக்கிறது. இப்போது நான் இங்கு வருகிறேன். இந்த இடம் என்ன? இங்கு 10. 15 பேர் வந்தால்.. இது எப்படி என்னை உற்சாகப்படுத்தும்.

நினைக்க கூடாது

நினைக்க கூடாது

இந்தியாவுக்குச் சென்றபின் ஒரு கூட்டத்தைப் பற்றி நான் ஒருபோதும் உற்சாகமாக இருக்கக்கூடாது. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், அங்கு 1.5 பில்லியன் மக்கள் உள்ளனர். எங்களிடம் 350 பேர் இருக்கிறார்கள். எனவே நாங்கள் உங்களுக்கு நன்றாகச் செய்கிறோம், நான் இந்த கூட்டத்தை நேசிக்கிறேன், அந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன். எனது 36 மணி நேர இந்திய சுற்றுப்பயணம் "பயனுள்ள பயணம்" "அவர்களுக்கு மிகுந்த அன்பு உண்டு. அவர்களுக்கு ஒரு சிறந்த தலைவர் இருக்கிறார், அவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு இருக்கிறது" என்றார்.

English summary
US president Donald Trump said that I may never be excited again about a crowd after going to India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X