வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களை ஹேக்கர்கள் குறி வைப்பதாக அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பைசர் நிறுவனம் மற்றும் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துகள் கெட்டு போகாமல் இருக்க -70 டிகிரி சென்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்படுகிறது.

IBM warns hackers targeting Covid vaccine

இந்த தடுப்பு மருந்துகளை ஹேக் செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பு மருந்துகள் பாதுகாக்கப்படுவது குறித்த தகவல்களை ஹேக்கர்கள் பல வழிகளில் சேகரிக்க செயல்படுகிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்!அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்!

சீனாவின் ஹேயர் நிறுவனம் சார்பில் போலியாக 10 நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஹேக்கர்கள் சோலார் பேனல்களை தயாரிக்கும் நிறுவனங்களையும் குறி வைத்துள்ளார்கள். அதாவது வெப்பமான நாடுகளில் தடுப்பூசிகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பயன்படுத்த தேவையான மின்சாரம் இந்த பேனல்கள் மூலம் பெறப்படுகிறது.

தடுப்பு மருந்துகள் விநியோக பிரிவு குறித்து உளவு பார்ப்பது யார் என்பது தெரியவில்லை. கொரோனா வைரஸ் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து தகவல்களை பெற ஈரான், வியத்நாம், வடகொரியா, தென் கொரியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஹேக்கர்கள் தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
International Business Machines Corporation warns that hackers targeting Covid 19 vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X