வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

H-1B visa : இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அளித்த உறுதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்காக ஹெச்-1பி விசா உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

Recommended Video

    டிரம்பும் பிடெனும் இந்தியர்களை கவர நினைப்பது ஏன்?

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்தவர் தான் ஜோ பைடன்.

    இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக ஜோ பைடன் பல்வேறு சலுகைகளை அளிப்பேன் என்று உறுதியளித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்காக ஹெச்-1பி விசா உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்திய வம்சாவளி அமெரிக்கர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜோ பைடன் பேசுகையில் , இந்தியாவுடனான வரலாற்று சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான முயற்சிகளுக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தலைமை தாங்கினேன். அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் மாறினால், உலகம் ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நான் கூறியிருந்தேன்.

    எல்லை பிரச்சனையில்.. எப்போதும் இந்தியாவுடன் உடன் நிற்பேன்.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் பைடன் அதிரடிஎல்லை பிரச்சனையில்.. எப்போதும் இந்தியாவுடன் உடன் நிற்பேன்.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் பைடன் அதிரடி

    கமலா புத்திசாலி

    கமலா புத்திசாலி

    அவர் புத்திசாலி, அவள் சோதனைகள் சந்தித்தார். அவர் எதற்கும் தயாராக இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் கமலாவை மிகவும் உற்சாகப்படுத்தும் மற்றொரு விஷயம், இந்தியாவில் தொடங்கிய அமெரிக்காவிற்கு அவரது தாயார் குடியேறிய கதை தான். உறுதியான மன தைரியத்துடன் தனது மகள்களை இந்த இடத்திற்கு அவர் கொண்டு வந்தது. அதை நீங்கள் உணரும் பெருமை எனக்குத் தெரியும். இது அவர் கதை மட்டுமல்ல.. உங்கள் கதையும் கூட,

    தேச பக்தர்கள் இந்தியர்கள்

    தேச பக்தர்கள் இந்தியர்கள்

    உங்கள்(இந்தியர்கள்) தியாகங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தின் தைரியத்துக்காகவும், நீங்கள் எங்கள் சமூகத்தின் மற்றும் எங்கள் நாட்டின் தூண்களாகிவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் மற்றும் இந்த தொற்றுநோயின் போது முன்னணி வீரர்களாக இருக்கிறீர்கள். அமெரிக்கா என்பது அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக நிம்மதியாக வாழக்கூடிய ஒரு இடம் என்று நீங்கள் உண்மையான வாக்குறுதியை அளிக்கிறீர்கள்.

    வெறுப்பு நடவடிக்கை

    வெறுப்பு நடவடிக்கை

    வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும். ஹெச்-1பி விசாக்கள் திடீர் ரத்து போன்ற தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் போன்ற சட்டப்பூர்வ குடியேற்றத்தின் ஒடுக்குமுறைக்கு நீங்கள் இலக்காக இருந்தீர்கள் . உங்கள் அனைவரையும் என் இதயம் நினைக்கிறது. நீங்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவை வலிமையாக்கி, நம் தேசத்தில் நெருக்கமாகி உள்ளீர்கள் என்றார்.

    உறுதி அளித்த பைடன்

    உறுதி அளித்த பைடன்

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா தனது சொந்த பிராந்தியத்திலிருந்தும் அதன் எல்லைகளிலிருந்தும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொடர்ந்து நான் துணை நிற்பேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் பணியாற்றுவேன். காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பெரிய உலகளாவிய சவால்களை இந்தியாவுடன் இணைந்து ஏற்றுக்கொள்வேன்" என்றார்.

    ஹெச்-1பி விசா

    ஹெச்-1பி விசா

    அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக அந்நாட்டு அரசால் ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவால் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பயனடைகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் பல்லாயிரம் பேர் ஹெச்-1பி விசா பெற்று வந்தார்கள். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் ஹெச்-1பி விசாக்கு தற்காலிக தடை விதித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

    விசா சீர்திருத்தம்

    விசா சீர்திருத்தம்

    எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் ஹெச்-1பி விசா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, அமெரிக்காவில் ஏற்கெனவே ஹெச்-1பி விசாவின் கீழ் வேலைபார்த்தவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பலாம் என்று அமெரிக்க அரசு கூறியிருந்தது. இந்நிலையில், தான் ஆட்சிக்கு வந்தால் ஹெச்-1பி விசா முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று ஜோ பைடன் உறுதியளித்திருக்கிறார்.

    English summary
    If voted to power in the November general elections, a Biden administration will reform the H-1B visa system and work towards eliminating the country-quota for Green Cards. i will stand with India in confronting threats facing it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X