வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட்டாக் பண்ணுணா.. அன்றோடு ஈரான் நாட்டை மொத்தமாக அழிச்சிடுவோம்.. டிரம்ப் கடைசி வார்னிங்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஒருவேளை அமெரிக்க நிலைகளின் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானை மொத்தமாக அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா அந்த நாட்டிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என தடைவிதித்து அதற்கு கெடு விதித்தது.

If Islamic republic attacks , it Will be Official End of Iran, Says US president Donald Trump

இதனால் ஆத்திரத்தில் உள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பெல்லாம் பொய்.. ஆஸ்திரேலியாவில் நடத்திய கணிப்புகள் என்னவாயிற்று.. சசி தரூர் கருத்து கணிப்பெல்லாம் பொய்.. ஆஸ்திரேலியாவில் நடத்திய கணிப்புகள் என்னவாயிற்று.. சசி தரூர்

இதனால் வளைகுடா நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. சவுதி அரேபியா, குவைத், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இடையே பதற்றம் நிலவுகிறது.

இதன் காரணமாக அமெரிக்கா தனது வெடிகுண்டு மீட்பு படையை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜரீஃப் கூறுகையில், "போர் வேண்டாம் என்பதிலும், ஈரானிய பிராந்தியத்தியத்துடன் போர் செய்ய வேண்டும் என்ற மாயையில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதாலும் விரும்பமாட்டார்கள் என்பதாலும் போர் வராது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு விடுத்த கடும் எச்சரிக்கையில், "இஸ்லாமிய குடியரசு படைகள் அமெரிக்காவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால், அன்றுடன் ஈரான் நாட்டின் கதை முடிந்துவிடும். அந்த நாட்டை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் செஞ்சிடுவோம், இதுக்கு அப்புறம் சும்மா, சும்மா மிரட்டிகிட்டு இருக்க மாட்டோம், இதுதான கடைசி வார்னிங்" என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
US president Donald Trump strit warning, If Islamic republic attacks , it Will be 'Official End of Iran'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X